Categories
மாநில செய்திகள்

தாறுமாறான கட்டண உயர்வு… தனியார் மயமாக்கப்பட்டதா ஊட்டி மலை ரயில்..? விளக்கமளிக்கும் தெற்கு ரயில்வே..!!

ஊட்டி மேட்டுப்பாளையம் மலை ரயில் தனியார் வசம் ஒப்படைக்க பட்டதாக வெளியான தகவலுக்கு தெற்கு ரயில்வே விளக்கமளித்துள்ளது.

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகைக்கு தினமும் நீலகிரி மலை ரயில் இயக்கப்பட்டு வருகிறது. ஏராளமான சுற்றுலா பயணிகள் பயணிப்பார்கள். கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த 8 மாதங்களாக இந்த சேவை நிறுத்தப்பட்டு இருந்தது. தற்போது இந்த சேவை தொடங்கியுள்ளதாகவும், இருப்பினும் இது தனியார் மயமாக்கப்பட்டு விட்டது என்ற செய்தி வெளியாகியுள்ளது. மேட்டுப்பாளையம் உதகை இடையே கடந்த ஐந்தாம் தேதி ஊட்டி மலை ரயில் இயக்கப்பட்டுள்ளது.

அப்போது தனியார் நிறுவன ஸ்டிக்கர் ஒட்டி இருப்பதாகவும், ஒரு முறை பயணமாக 3000 வசூலிக்க பட்டதாகவும் வெளியான தகவலால் மலை ரயில் தனியார் வசம் ஒப்படைக்க விட்டுவிட்டதாக பலரும் கண்டனம் தெரிவித்தனர். இதுகுறித்து தெற்கு ரயில்வே நிர்வாகம் விளக்கமளித்துள்ளது. ஊட்டி மலை ரயில் தனியார் வசம் ஆனதாக வந்த செய்தி முழுவதும் தவறு. மேட்டுப்பாளையம் உதகை இடையே ரயில் இயக்கப்பட்டது உண்மைதான் என்று ஒப்புக் கொண்ட தெற்கு ரயில்வே, தனியார் நிறுவனத்திற்காக ஏற்பாடு செய்யப்பட்ட சுற்றுலா பயணிகளுக்கான சிறப்பு ரயில் என்று தெரிவித்துள்ளது.

இத்தகைய சிறப்பு ரயில்கள் இயக்குவதற்கும், முன்பு இயக்கப்பட்ட வழக்கமான ரயில் சேவைக்கும் எந்த தொடர்பும் இல்லை. இதனால் மலை ரயில் சேவைகளை எந்தவிதமான தாக்கத்தையும் ஏற்படுத்தாது. என்று தெற்கு ரயில்வே விளக்கமளித்துள்ளது. அதிக கட்டணம் குறித்து விளக்கம் அளித்துள்ள தெற்கு ரயில்வே தனியார் நிறுவனத்திற்கு, 13 நாட்கள் ரயில்களை இயக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதற்காக அந்த நிறுவனத்திடமிருந்து வாடகை பெறப்பட்டுள்ளது. அதற்கேற்ப கட்டணத்தை நிர்ணயித்து தனியார் நிறுவனம் பயணிகளை அழைத்துச் சென்றுள்ளது. ரயில்வே பயண கட்டணத்திற்கும், இதற்கும் எந்த தொடர்பும் இல்லை என்று தெற்கு ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. தெற்கு ரயில்வே வாரியம் அனுமதி அளித்த பிறகு பழைய கட்டணத்துடன் வழக்கம் போல் மீண்டும் ஊட்டி மலை ரயில் சேவை தொடங்கப்படும் என்று விளக்கம் அளித்துள்ளது.

Categories

Tech |