மக்கள் தொகை பதிவேடு தயாரிப்பில் பொதுமக்கள் தவறான தகவல் அளித்தால் ரூ.1,000 அபராதம் விதிக்கபடும் என்று மத்திய அரசு எச்சரித்துள்ளது.
தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு, பதிவேடு தயாரிக்கும் பணிக்கான ஏற்பாடுகளில் மத்திய பாரதீய ஜனதா கூட்டணி அரசு தீவிரம் காட்டி உள்ளது. இதற்கு எதிராக ஆங்காங்கே எதிர்ப்புகளும் , போராட்டங்களும் நடக்கின்றன.
ஏப்ரல் 1-ந் தேதி தொடங்கி, செப்டம்பர் 30-ந் தேதி வரை இந்தப் பணி நடைபெறும் என உள்துறை அமைச்சக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.இந்த நிலையில், மக்கள் தொகை பதிவேடு புதுப்பித்தல் பணியின்போது யாரேனும் தவறான தகவல்களை அளித்தால், அவர்களுக்கு ரூ.1,000 அபராதம் விதிக்கபடும். தவறான தகவல்களை கொடுத்தால் அபராதம் விதிக்கவும் சட்டத்தில் இடம் இருப்பதாக மத்திய அரசு எச்சரித்து உள்ளது.
இந்த படிவத்தை நிரப்புவதற்காக, ஆதார் எண், வாக்காளர் அடையாள எண், ஓட்டுனர் உரிமம் எண் உள்ளிட்டவை கேட்கப்படும். இந்தப் பணியில் உள்ளூர் மக்களுடன் அறிமுகமான ஆசிரிய, ஆசிரியைகள் ஈடு படுத்தப்படுவார்கள்.