Categories
மாநில செய்திகள்

மீண்டும் அதிகரிப்பு!! இந்த மாதம் முடிவதற்குள்…. பொதுமக்கள் அதிர்ச்சி…!!

இந்த மாதத்துக்கான வீட்டு மற்றும் வர்த்தக சிலிண்டரின் விலை மீண்டும் அதிகரித்துள்ளது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் மூலம் வீட்டு உபயோகத்திற்கு 14.2 கிலோ எடையிலும், வர்த்தக பயன்பாடுகளுக்கு 19 கிலோ எடையிலும், மலைப்பாங்கான இடங்களில் உள்ள வீடுகளுக்கு 5 கிலோ எடையிலும் கியாஸ் சிலிண்டர்கள் வினியோகம் செய்யப்பட்டு வருகின்றன. ஆண்டிற்கு 12 சிலிண்டர்களை மானிய விலையில் பெற்றுக்கொள்ள முடியும். 12 சிலிண்டருக்கு பிறகு வாங்கும் ஒவ்வொரு சிலிண்டருக்கும் மானியமில்லாமல் தான் வாங்க முடியும்.

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலையின் அடிப்படையில் மானியம் இல்லாத கியாஸ் சிலிண்டர் விலை மாதந்தோறும் மாற்றி அமைக்கப்பட்டு வருகிறது. அதன்படி ஒவ்வொரு மாதமும் 1-ந்தேதி சிலிண்டர் விலை நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் இந்த வருடம் ஜனவரி 1-ந்தேதி ஒரு சிலிண்டரின் விலை ரூ.734 என நிர்ணயிக்கப்பட்டது. அடுத்த பிப்ரவரி மாதம் சிலிண்டர் விலை அதிரடியாக ரூ.147 அதிகரித்து ரூ.881-க்கு விற்பனை ஆனது. இதையடுத்து சிலிண்டர் விலை படிப்படியாக குறைந்தது. பின்னர் கடந்த ஆகஸ்டு மாதம் சிலிண்டர் விலை ரூ.610 ஆக நிர்ணயிக்கப்பட்டது. இதையடுத்து செப்டம்பர், அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் சிலிண்டர் விலையில் மாற்றம் இல்லாமல் இருந்தது.

இந்நிலையில் இந்தமாதத்துக்கான சிலிண்டர் விலை கடந்த 1-ந்தேதி மாற்றியமைக்கப்பட்ட  நிலையில், மானியம் இல்லாத சமையல் கியாஸ் சிலிண்டர் விலை ரூ.660 ஆக உயர்த்தப்பட்டு ஒரு கியாஸ் சிலிண்டருக்கு ரூ.50 அதிகரித்திருந்தது. இதையடுத்து கியாஸ் சிலிண்டர் விலை குறைந்துவந்த நிலையில், இந்த திடீர் உயர்வு பொதுமக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதற்கிடையில் இந்த மாதம் முடிவதற்குள் மீண்டும் கியாஸ் சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டுள்ளது. சென்னையில் ரூ.660 ஆக இருந்த சிலிண்டர் விலை ரூ.50 உயர்ந்து, தற்போது ரூ.710-க்கு விற்பனையாகிறது. எனவே கியாஸ் சிலிண்டர் விலை மீண்டும் உயர்த்தப்பட்டுள்ளதாள் பொதுமக்களுக்கு பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஏற்கனவே பெட்ரோல்-டீசல் விலை உயர்வு காரணமாக அதிர்ச்சியில் இருக்கும் மக்களுக்கு சிலிண்டரின் தொடர் விலையேற்றம் இன்னும் அதிக அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது.

Categories

Tech |