தனியார் கல்லூரி முதல்வருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது மாணவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்பத்தியுள்ளது.
உலகெங்கிலும் கொரோனா தொற்று பரவி ஒரு வருடத்தை கடந்தும் சற்றும் குறைந்தபாடில்லை, இதனால் கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதனை தொடர்ந்து குமரி மாவட்டத்திலும் தொற்று பரவுவதை தடுப்பதற்காக பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களில் மக்களை காப்பாற்றும் வகையில் கண்காணிப்பு பணியில் சுகாதாரத்துறை ஊழியர்கள் முழுமையாக ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் கண்காணிப்பு பணியின் பரிசோதனையின் போது காய்ச்சல் பாதிப்பு உள்ளோரை கண்டறிந்து அவர்களுக்கு இரத்த பரிசோதனை செய்து கொரோனா தொற்று உள்ளதா என்பதையும் சுகாதாரத்துறை ஊழியர்கள் சோதனை செய்து வருகின்றனர் . இதனை தொடர்ந்து தனியார் கல்லூரிகளில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
அப்பொழுது நாகர்கோவிலில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் முதல்வருக்கு சளி மற்றும் காய்ச்சல் இருந்தது, அவரை பரிசோதிக்கும் பொழுது சோதனையின் முடிவில் அவருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.இதனால் அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார் . மேலும் அக்கல்லூரியில் 50 பேருக்கு ரத்தப் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது, பரிசோதனை முடிவுகள் விரையில் வெளிவரும்.
இதனிடையே அக்கல்லூரி மாணவர் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு கொரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார் என்று தெரியவந்துள்ளது.இதனால் சுகாதார ஊழியர்கள் கல்லூரியில் கிருமிநாசினி தெளிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் சுகாதாரத்துறை அதிகாரிகள் அவருடைய வீட்டில் மற்றும் வீட்டை சுற்றியுள்ள பகுதிகளில் வசிப்போருக்கு காய்ச்சல் பாதிப்பு மற்றும் தொற்று இருக்கிறதா இல்லையா என்று பரிசோதித்து வருகின்றனர.