அரியலூரில் கொரோனா பரிசோதனையின் போது ஒரே நாளில் 6 பேருக்கு தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதனால் தற்போது அனைத்து மாவட்டங்களிலும் பரிசோதனை செய்வது அதிகரித்துள்ளது. இந்நிலையில் அரியலூர் மாவட்டத்தை சுற்றியுள்ள பகுதிகளான ஆண்டிமடம், செந்துறை, ஜெயங்கொண்டான் ஆகிய ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது அதில் மொத்தம் 6 பேருக்கு தொற்று இருப்பது சோதனையின் முடிவில் தெரியவந்துள்ளது. இதனையடுத்து கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 ஆயிரத்து 777ஆக உயர்ந்துள்ளது. இதில் ஏற்கனவே 49 பேர் உயிரிழந்தனர். தற்போது சிகிச்சைப் பெற்றதில் 4 ஆயிரத்து 700 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும் 48 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.