Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கை 47ஆக அதிகரிப்பு!

சீனாவை அச்சுறுத்தி வந்த கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகளையும் அச்சுறுத்தி வருகிறது. சீனா மட்டுமல்லாமல் தற்போது கொரோனா வைரஸ் தொற்றால் இத்தாலி, ஈரான், கனடா உள்ளிட்ட பல நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த கொரோனா வைரஸ் தாக்குதலால் கொரோனா வைரஸ் தாக்குதலால் இதுவரை ஒரு லட்சத்திற்கும் அதிகமான பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் 4,000க்கும் அதிகமானோர் பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவிலும் கொரோனா வைரஸ் தாக்கி இருப்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கொரோனா வைரஸ் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த மொபைல்போன்களுக்கு காலர் டியூன் மற்றும் குறுஞ்செய்தி அனுப்பும் நடவடிக்கையை சுகாதார துறை மேற்கொண்டுள்ளது.

மேலும் கொரோனா வைரஸ் குறித்த சந்தேகங்களுக்கு 24 மணி நேரமும் 01123978046 என்ற எண்ணுக்கு அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்தியாவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 47ஆக அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

நேற்று மட்டும் 3 வயதுக் குழந்தை உள்பட 8 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டது. இது தொடா்பாக மத்திய சுகாதார அமைச்சக அதிகாரிகள் கூறியதாவது, ஜம்மு-காஷ்மீரில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட 63 வயதுப் பெண் அண்மையில் ஈரானிலிருந்து திரும்பியுள்ளாா். டெல்லியில் வைரஸ் பாதிப்பு ஏற்பட்டவா் அண்மையில் இத்தாலிக்கு பயணம் மேற்கொண்டுள்ளாா். ஆக்ராவில் ஏற்கெனவே வைரஸ் தொற்று ஏற்பட்டவா்களுடன் தொடா்பிலிருந்த மீரட்டைச் சோந்த நபா் வைரஸால் பாதிக்கப்பட்டாா். வைரஸ் தொற்று ஏற்பட்ட அனைவருக்கும் சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்றன என்று தகவல் அளித்துள்ளனர்.

Categories

Tech |