Categories
உலக செய்திகள்

ஓமன் நாட்டில்… இந்தியாவிற்கான கச்சா எண்ணெய்யின் ஏற்றுமதி உயர்வு…!!!

ஓமன் நாட்டில் இந்தியாவிற்கான கச்சா எண்ணைய்யின் ஏற்றுமதி உயர்ந்திருப்பதாக தேசிய புள்ளியியல் மையம் கூறியிருக்கிறது.

ஓமன் நாட்டின் தேசிய புள்ளியியல் மையம் தெரிவித்திருப்பதாவது ஓமன் நாட்டின் பெட்ரோலிய எண்ணெய் விலை சராசரியாக இருக்கும் பட்ஜெட்டின் விலையை காட்டிலும் இருபத்தி ஒன்பது அமெரிக்க டாலர்கள் அதிகமாக இருக்கிறது. இதேபோன்று, இந்தியாவிற்கு ஓமனிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் கச்சா எண்ணெய் அளவு கடந்த மார்ச் மாதத்திலிருந்து அதிகரித்துக் கொண்டிருக்கிறது.

மார்ச் மாத கடைசியில், ஓமனின் ஒட்டுமொத்த கச்சா எண்ணெய்க்கான ஏற்றுமதியானது, கடந்த வருடத்தை விட 18% அதிகரித்திருக்கிறது. அதே சமயத்தில் ஓமனின் கச்சா எண்ணெய்க்கான சராசரி விலையானது, மார்ச் மாதத்தின் கடைசியில் 59.5% உயர்ந்திருக்கிறது என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

Categories

Tech |