தமிழகத்தில் வேலைவாய்ப்பின்மை குறைந்த அளவே காணப்படுகிறது என்றும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
தமிழக அரசின் தொடர் வழிகாட்டுதலின் பெயரில் தமிழகத்தில் வேலைவாய்ப்பு என்பது அதிகரித்து உள்ளது என முதலமைச்சர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், எதிர்க்கட்சிகள் தொடர்ந்து தவறான தகவல்களை பரப்பி வந்தாலும் கூட தமிழகத்தில் வேலை வாய்ப்பு அதிகரித்து வருவதாகவும், ஒரு ஆங்கில நாளிதழில் வெளியான செய்தியை அவர் மேற்கோள் காட்டி அதில், அகில இந்திய அளவில், வேலைவாய்ப்பின்மை 8.3 சதவீதமாக உள்ள நிலையில், தமிழகத்தில் மட்டும் அது 2.6 சதவீதமாக குறைந்திருப்பதாக கூறப்பட்டுள்ளது.
மேலும் கொரோனா தொற்றிற்கு முந்தைய காலத்தை விடவும், தற்போது வேலைவாய்ப்பின்மை என்பது கணிசமாக குறைந்துள்ளது என்று அவர் கூறியுள்ளார். மேலும் அந்த ஆங்கில செய்திக்கறிப்பில், விவசாயத்தில் ஈடுபடுவோரின் எண்ணிக்கை 29 சதவீதமாக உயர்ந்துள்ளது என்றும் வாகன உற்பத்தி மீண்டும் அதிகரித்துள்ளதால் தமிழகத்தில் வேலை வாய்ப்பு பெருகி உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே எந்த வகையில் பார்த்தாலும் வேலைவாய்ப்பின்மை என்பது தமிழகத்தில் குறைந்த வண்ணமே உள்ளது என்று முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.