Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

தீவிரமடைந்த பருவ மழை… ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரிப்பு… கண்காணித்து வரும் நீர்வளத்துறை அதிகாரிகள்…!!

பருவ மழை காரணத்தினால் ஒகேனக்கல்லுக்கு தண்ணீர் திறக்கப்பட்டதால் தற்போது நீர் வரத்து 6 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது.

தென்மேற்கு பருவமழை கேரளா மற்றும் கர்நாடகாவில் தீவிரமடைந்துள்ளது. இதனால் கர்நாடக மாநிலத்தில் உள்ள கிருஷ்ணராஜசாகர் மற்றும் கபினி அணைகள் வேகமாக நிரம்பி வருகிறது. இந்நிலையில் கபினி அணையில் இருந்து வினாடிக்கு 16 ஆயிரம் கன அடி தண்ணீரும் மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணையில் இருந்து விநாடிக்கு 5 ஆயிரம் கன அடி தண்ணீரும் என மொத்தமாக 21 ஆயிரம் கன அடி தண்ணீரை தமிழகத்துக்கு காவிரி ஆற்றிலிருந்து திறந்துவிடப்பட்டுள்ளது. இதனையடுத்து தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்தானது தற்போது அதிகரித்துள்ளது.

இதனால் இப்பகுதிக்கு விநாடிக்கு 5 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதனைத் தொடர்ந்து நீர்வரத்து படிப்படியாக அதிகரித்த நிலையில் மாலை 5 மணி அளவில் நிலவரப்படி ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்தானது 6 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது. அதன்பின் காவேரி ஆற்றில் நீர் வரத்தை தமிழக கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர் வளத்துறை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். மேலும் கர்நாடக அணையிலிருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் முழுவதும் மாலை நேரத்துக்குள் ஒகேனக்கல்லுக்கு வந்து சேரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Categories

Tech |