கனமழை காரணத்தினால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 8 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது.
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து தற்போது அதிகரித்து வருகிறது. இந்நிலையில் கர்நாடக மாநிலத்தில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கன மழை தீவிரமாக பெய்து வருகிறது. இதனால் கிருஷ்ணராஜசாகர் மற்றும் கபினி அணைகளில் நீர்வரத்து அதிகரித்து வருகின்றது. அதன்பின் இரண்டு அணைகளில் இருந்து தமிழகத்திற்கு காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.
இதனையடுத்து விநாடிக்கு 7 ஆயிரம் கன அடி தண்ணீர் தற்போது வந்து கொண்டிருக்கின்றது. இதில் கர்நாடகா காவிரி நீர்பிடிப்பு பகுதியிலிருந்து மீண்டும் கன மழை பெய்து வருகின்ற காரணத்தினால் கிருஷ்ணராஜசாகர் மற்றும் கபினி அணைகளில் இருந்து கூடுதலாக தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. பின்னர் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து தற்போது படிப்படியாக அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
இதில் காலை நிலவரப்படி 8 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனைத் தொடர்ந்து ஐந்தருவி, மெயினருவி மற்றும் சீனி பால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் வரத்தானது தற்போது அதிக அளவில் பாய்ந்து வருகிறது. மேலும் காவிரி ஆற்றின் நீர்வரத்தை மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.