குஜராத் மாநிலத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே செல்கிறது. நேற்று 163 பேருக்கு புதிதாக கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்ட நிலையில், இன்று காலை நிலவரப்படி 92 பேருக்கு கொரோனா புதிதாக கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. இதையடுத்து குஜராத்தில் மொத பாதிப்புகளின் எண்ணிக்கை 929-ல் இருந்து 1,021 ஆக அதிகரித்துள்ளது. நாளுக்கு நாள் குஜராத்தில் அதிகரித்து வரும் சூழ்நிலையில் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
மொத்தம் பாதிக்கப்பட்ட 1,021 பேரில் இதுவரை 74 பேர் குணமடைந்து வெளியேற்றப்பட்டனர். இதுவரை 38 பேர் உயிரிழந்துள்ளனர். இன்று காலை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலின் படி, நாடு முழுவத்தும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 13,387 ஆக உயர்ந்துள்ளது. அதில், 11,201 பேருக்கு தற்போது சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. 1,748 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இதுவரை 437 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் 1,007 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது குறிப்பித்தக்கது. நாட்டில் மகாராஷ்டிரா, டெல்லி, தமிழ்நாடு ஆகிய மாநிலங்கள்தான் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன. தற்போது, ராஜஸ்தான், மத்திய பிரதேசம், குஜராத் உள்ளிட்ட மாநிலங்களிலும் கொரோனா தொற்று இருக்கும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகமாகி வருகிறது.