Categories
தேசிய செய்திகள்

சிஏஏ-வால் நாட்டை விட்டு வெளியேறுபவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது!

குடியுரிமை திருத்தச் சட்டம் அமல்படுத்தப்பட்ட பின் சட்ட விரோதமாக இந்தியாவுக்குள் வந்தவர்கள் வெளியேறுவது அதிகரித்துள்ளதாக எல்லை பாதுகாப்பு படை தெரிவித்துள்ளது.

குடியுரிமை திருத்தச் சட்டம் கடந்த மாதம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இதை எதிர்த்து பல்வேறு அமைப்பினரும் போராடிவருகின்றனர். இருப்பினும், குடியுரிமை திருத்தச் சட்டதால் இந்திய குடிமக்களுக்கு பாதிப்பில்லை என்றும் சட்டவிரோதமாக குடியேறியவர்கள் மீது மட்டுமே நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் அரசு தரப்பு வாதத்திற்கு வலு சேர்க்கும் வகையில், எல்லை பாதுகாப்புப் படையினர் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளனர். எல்லை பாதுகாப்புப் படையின் ஐஜி ஒய்.பி. குரானியா செய்தியாளர்களிடம் பேசுகையில், “குடியுரிமை திருத்தச் சட்டம் அமல்படுத்தப்பட்ட பின், சட்ட விரோதமாக இந்தியாவுக்குள் நுழைந்த வங்கதேசத்தைச் சேர்ந்தவர்கள், மீண்டும் சொந்த நாட்டிற்கு திரும்புவது அதிகரித்துள்ளது” என்றார்.

Categories

Tech |