தமிழகத்தில் பரவலாக பெய்து வரும் கனமழையால் காவேரி அணையில் நீர் வரத்து அதிகமாக காணப்படுகிறது.
தமிழகத்தில் தற்போது ஒரு வார காலமாக மிதமான மழை முதல் கனமழை வரை பல்வேறு மாவட்டங்களில் பெய்து வருகிறது. இதேபோன்று கர்நாடகத்தில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் அங்கு அணைகளில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. அதாவது தமிழக எல்லையான பிலிக்குண்டுலுக்கு நேற்று மாலை 22,000 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை 1000 அடி உயர்ந்து 23 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது.
மேட்டூர் அணைக்கு நேற்றுக் காலை 17,937 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை 21,339 கன அடியாக அதிகரித்துள்ளது. அணையின் நீர்மட்டம் 90 கன அடியாகவும், நீர் இருப்பு 53 டி.எம்.சியாகவும் உள்ளது. அணையில் இருந்து பாசனத்துக்குக் காவிரியாற்றில் 9,000 கன அடி நீரும், கிழக்கு மேற்கு கால்வாய்களில் 700 கன அடி நீரும் திறந்துவிடப்படுகிறது.