Categories
மாநில செய்திகள்

மீண்டும் தலைதூக்கும் கொரோனா…. மாவட்ட ஆட்சியர்களுக்கு முதல்வர் போட்ட உத்தரவு…. அலர்ட் ஆகுங்க….!!!!

அதிகரித்துவரும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதற்கு மு க ஸ்டாலின்  மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் அரசு துறைகளில் உள்ளவர்களுக்கு முக்கிய உத்தரவை தெரிவித்துள்ளார்.

கடந்த 2 வருடங்களாக கொரோனா எனும் கொடிய வைரஸ் உலகம் முழுவதும் பரவி கோரத்தாண்டவம் ஆடி வந்தது. இந்த நிலையில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் காணொளி காட்சியில் மாவட்ட ஆட்சியர் தலைவர்களுடன் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் தடுப்பூசி செலுத்தும் பணிகள் குறித்தும்ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

அப்போது பேசிய முதலமைச்சர்.” கொரோனா வைரஸ் குறித்து காணொளி காட்சி மூலம் ஆலோசனை கூட்டமாக இது நடைபெறுகிறது. இந்த அரசு  பொறுப்பேற்ற போது கொரோனா தொற்றின் இரண்டாவது அலை உச்சத்தை நோக்கி சென்று கொண்டிருந்தது. அந்த நிலையில்  உடனடியாக தேவைப்படும் நடவடிக்கைகளை எடுத்து உங்களுடைய கடும் உழைப்பினால் ஓரளவுக்கு கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தோம். அதனால் ஏற்பட்டிருந்த பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கைகளையும் பெருமளவு குறைத்தோம்.

இதனைத் தொடர்ந்து கடந்த 2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நமது மாநிலங்களில் தடுப்பூசி செலுத்தும் பணி துவங்கியது. இதன் தொடர்ச்சியில் தடுப்பூசி செலுத்தக்கூடிய பணியில் இருந்து சுணக்கத்தை முழுமையாக அகற்றி தடுப்பூசி செலுத்துவதை ஒரு மக்கள் இயக்கமாக நாம் மாற்றி காட்டியிருக்கிறோம். இதில் மாவட்ட ஆட்சி தலைவர்களுடைய பங்கு மிக மகத்தானவை. இதன் விளைவாகத்தான் தமிழ்நாட்டில் தடுப்பு ஊசி செலுத்துவதற்கு தகுதியுள்ள 6.33 கோடி மக்களில் 74.75 % பேருக்கு 2 தவணை தடுப்பூசி, 91.5% பேர் முதல் தவணை தடுப்பூசி மற்றும்  41.66% பெர் பூஸ்டர் தடுப்பூசிகளின் செலுத்தியுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து கொரோனா  தொற்றின் மூன்றாவது அறையில் தாக்கம் பெருமளவில் இல்லை. இருப்பினும் பாதிக்கப்பட்டவர்கள்  எண்ணிக்கை அதிக அளவில் இருந்தாலும் கடும் நோயையும், பலி எண்ணிக்கையும் ஏற்படுத்தவில்லை. இது போன்று நாம் எடுத்த பல்வேறு முயற்சிகளின் விளைவாக தான் நாம் பெரும் தோற்று பாதிப்பிலிருந்து வெளிவந்து இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி, பொருளாதாரத்தில் மெல்ல வளர்ச்சி பெற்று, மக்களுடைய வாழ்வாதாரமும் படிப்படியாக உயர்ந்து வருகிறது.

இதற்கிடையில்  டெல்லி, மகாராஷ்டிரா, உத்திரபிரதேசம்  போன்ற மாநிலங்களில்  கடந்த ஒரு வாரமாக கொரோனா  வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சற்று அதிகரித்து வருகிறது. இந்த அதிகரிப்பு ஒமைக்ரான் வைரஸின்  புதிய வகையால் தான் ஏற்படுவதாக மருத்துவ அறிஞர்கள் தெரிவிக்கின்றனர். இருப்பினும் பலி எண்ணிக்கை  அதிகரிக்கவில்லை என்பது சற்று ஆறுதல் அளிக்கிறது. ஆனாலும்  நாம் எந்த ஒரு சூழ்நிலையிலும்  எதிர் கொள்வதற்கு தயாராக இருக்க வேண்டும் என்பதை நான் வேண்டிக்கொள்கிறேன். நான் ஏற்கனவே பலமுறை அறிவித்திருந்த அடிப்படையில் இந்த பெரும் தொற்றினை  அளிப்பதற்கு நம்மிடம் இருக்கக்கூடிய மிகப்பெரிய ஆயுதம் தடுப்பூசி தான். தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு  வைரஸ் பாதிக்கப்பட்டால் கூட உயிர் இழப்பு மிக மிக குறைவு. அதனால் நாம் அனைவரும் கட்டாயமாக செலுத்தியிருக்க வேண்டும். நமது மாநிலத்தில் தடுப்பு ஊசி செலுத்தி கொண்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வந்தாலும் கூட மாநிலங்களை ஒப்பிடுகையில் சற்று குறைவாக தான் இருக்கிறது. அதாவது இரண்டாவது தடுப்பூசி செலுத்தக் கூடியவர்கள் நமது மாநிலத்தில் 1.48 கோடி பேரும், பூஸ்டர் தடுப்பூசி  11.68 லட்சம் பேர்  இன்னும் தடுப்பு ஊசி செலுத்தி கொள்ளாமல் இருக்கிறார்கள். இதனால் இனிவரும் காலங்களில் அனைவரும் தடுப்பூசி செலுத்துவதை உறுதி செய்ததே நம்முன் இருக்கக்கூடிய ஒரு சவாலாக இருக்கிறது.

இந்த நிலையில் வைரஸை கட்டுப்படுத்துவதற்காக பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள்  பெரும்பாலும் குறைக்கப்பட்டு உள்ள நிலையில்  மக்கள் அதிகமாக கூடும் பொது இடங்களில்  அனைவரும் முக கவசம் அணிவது நீங்கள் உறுதி செய்து கொள்ள வேண்டும். இவ்வாறு மக்களின் பொருளாதார வளர்ச்சி மற்றும் வாழ்வாதாரம் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்யக்கூடிய அதே சமயத்தில் தொற்றினால் உயிரிழப்புகள் அதிகளவில் ஏற்படாதவாறும்நாம் தடுத்திட வேண்டும். இது ஒரு fine balance. இதற்கான நடவடிக்கைகளை நாம் உடனடியாக மேற்கொள்ள வேண்டும். இதனை எல்லாம் மனதில் வைத்துக் கொண்டு அனைத்து நடவடிக்கைகளையும் அரசு துறைகள், மாவட்ட ஆட்சியில் உள்ளவர்கள் அனைவரும்  தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும் என்று எனது வேண்டுகோளை இந்த தருணத்தில் மீண்டும் உங்கள் முன் வைக்கிறேன்” என்று கூறியுள்ளார்.

Categories

Tech |