கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை 14,110 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை அதிவேகமாக பரவி வருகின்றது. இந்நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 13, 952 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனர். அதில் 12,955 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். ஆனால் சிகிச்சை பலனளிக்கமால் 118 பேர் பரிதமாக உயிரிழந்து விட்டனர்.
இந்நிலையில் தொற்று பாதித்தவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் மற்றும் அவரின் உறவினர்களுக்கு உமிழ்நீர் பரிசோதனை செய்தற்கான முடிவு வெளியாகியுள்ளது. அந்தப் பரிசோதனை முடிவில் 158 நபர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் இம்மாவட்டத்தில் கொரோனோ தொற்று பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கையானது 14, 110 ஆக அதிகரித்துள்ளது.