இந்தியாவில் கொரோனாவால் பாதித்தோர் எண்ணிக்கை 415ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அதிகாரப்பூர்வ தகவலை வெளியிட்டுள்ளது. ஒரே நாளில் 19 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. மேலும் 18,383 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக தகவல் அளித்துள்ளனர்.
கொரோனா வைரஸ் 192 நாடுகளுக்குப் பரவி, உலகையே அச்சுறுத்தி வருகிறது. சீனாவில் தொடங்கிய இந்த வைரசால் அங்கு 81,000 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 3,261 பேர் உயிரிழந்தனர். கடந்த நான்கு நாட்களாக அங்கு கொரோனா வைரஸ் தாக்கம் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. ஆனால் தற்போது மற்ற நாடுகளில் இதன் அச்சுறுத்தல் தொடங்கியுள்ளது.
Total number of positive Coronavirus cases in the country is 415: Indian Council of Medical Research (ICMR) pic.twitter.com/xksiw6dkAR
— ANI (@ANI) March 23, 2020
உலகளவில் கொரோனா வைரஸ் நோயால் உயிரிழந்தோர் எண்ணிக்கையானது 14,613ஆக அதிகரித்துள்ளது. 192 நாடுகளுக்கு பரவிய நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,36,075 ஆக உயர்ந்துள்ளது. ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான இத்தாலி, சீனாவை விட கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இத்தாலியில் கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5,476 ஆக அதிகரித்துள்ளது. இந்த நிலையில் இந்தியாவிலும் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 415ஆக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகலாய் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.