கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் உச்சநீதிமன்றத்தில் நேரடி வழக்கு விசாரணை இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
நேரடி வழக்கு விசாரணை தற்போது இல்லை என உச்சநீதிமன்றத்தில் 7 நீதிபதிகள் குழு அறிவித்துள்ளது. நீதிபதிகள் அருண் மிஸ்ரா, நாரிமன், லலித், சந்திரசூட், கான்வில்கர், நாகேஸ்வர் ராவ் அடங்கிய குழு அறிவித்துள்ளது. மார்ச் 24ம் தேதி முதல் காணொலி காட்சி மூலம் வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. நாடு முழுவதும் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், 5ம் கட்ட ஊரடங்கு ஜூன் 30ம் தேதிவரை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக, நாடு முழுவதும் உள்ள உயர்நீதிமன்றங்கள், கிளை நீதிமன்றங்கள், உச்சநீதிமன்றம் ஆகியவற்றில் காணொலி மூலம் வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், நேரடி வழக்கு விசாரணை செய்வது குறித்து, ஜூன் 30ம் தேதிக்கு பிறகே தெரிவிக்கப்படும் என்றும் அதுவரை காணொலி மூலம் வழக்கை விசாரிக்க முடிவெடுக்கப்பட்டள்ளது. நாட்டில் அதிகபட்சமாக பாதிக்கப்பட்டுள்ள மாநிலங்களின் பட்டியலில் டெல்லியும் இருப்பதால் இந்த நடவடிக்கையை உச்சநீதிமன்றம் மேற்கொண்டுள்ளது.