செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா பரிசோதனையின் போது ஒரே நாளில் 2,154 பேருக்கு தொற்று இருப்பது சோதனையின் முடிவில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் தொற்று பரவுவதை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசு அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் தற்போது ஞாயிற்றுக்கிழமைகளில் ஊரடங்கு மற்றும் இரவு நேரங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா பரிசோதனையின் போது ஒரே நாளில் 2,154 பேருக்கு தொற்று இருப்பது சோதனை முடிவில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாவட்டத்தில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளது.