சென்னையில் நேற்று இரவு முதல் தற்போது வரை கொரோனவால் பாதிக்கப்பட்டிருந்த 28 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
இவர்கள் அனைவரும் சுமார் 55 வயது முதல் 85 வயது நிரம்பியவர்கள் ஆவர். சென்னையில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கையால் முழு ஊரடங்கு அங்கு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. சென்னையில் நேற்று புதிதாக 1,322 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதனால் கொரோனா பாதித்தவர்கள் மொத்த எண்ணிக்கை 38,327 ஆக உயர்ந்துள்ளது.
சென்னையில் மட்டும் இதுவரை கொரோனோவால் 529 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னையில் மட்டும் கொரோனா தொற்றிலிருந்து இதுவரை 21,098 பேர் குணமடைந்துள்ளனர். இந்த நிலையில் 16,699 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், ராயபுரம், தேனாம்பேட்டை, தண்டையார்பேட்டை உள்ளிட்ட 11 மண்டலங்களில் பாதிப்பு எண்ணிக்கை மிகவும் அதிகரித்துள்ளது. இந்த நிலையில் நாளுக்கு நாள் உயிரிழப்புகள் எண்ணிக்கையும் சென்னை அதிகரித்து வருவது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.