Categories
தேசிய செய்திகள்

அதிகரிக்கும் டெங்கு பாதிப்பு…. பள்ளிகளுக்கு பறந்த புதிய உத்தரவு…. மாநில அரசின் அதிரடி அறிவிப்பு…..!!!!!

உத்திரபிரதேச மாநிலத்தில் தற்போது டெங்கு காய்ச்சலின் பரவல் அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இங்கு குறிப்பாக பிரயாக்ராஜ் மற்றும் கான்பூர் பகுதிகளில் அதிக அளவில் பாதிப்பு இருக்கிறது. இந்த டெங்கு பாதிப்பின் காரணமாக பிரயாக்ராஜ் பகுதியில் உள்ள அரசு பள்ளிக்கு ஒரு நாள் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. அதன் பிறகு டெங்கு காய்ச்சலின் பரவலை தடுப்பதற்காக பல்வேறு இடங்களில் கொசு மருந்து அடிக்கப்படுவதாக தலைமை மருத்துவ அதிகாரி நாணக் சரண் கூறியுள்ளார்.

இந்த டெங்கு பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் உயர்மட்ட சீராய்வுக் கூட்டம் நடத்தி மாநில சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியுள்ளார். இந்நிலையில் கான்பூரில் பாதிப்பு அதிகமாக இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இங்கு நாள்தோறும் 60 முதல் 70 பேர் டெங்கு காய்ச்சல் அறிகுறியோடு வருவதோடு, கேரி பகுதியில் 9 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து கான்பூரில் டெங்கு உறுதி செய்யப்பட்டவர்களில் 14 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறப்பட்டுள்ளது. தொடர்ந்து பாதிப்பின் தாக்கம் அதிகரித்து வருவதால் விடுமுறையில் இருக்கும் அரசு மருத்துவர்கள் மற்றும் பணியாளர்களுக்கு விடுமுறை ரத்து செய்யப்பட்டுள்ளது.

மேலும் பள்ளிகளுக்கு வரும் குழந்தைகள் முழு சட்டை, முழு பேண்ட் அணிந்து வருவதை பள்ளிகள் உறுதிப்படுத்துவதோடு, பள்ளி வளாகங்களில் குப்பை மற்றும் தண்ணீர் தேங்காத அளவுக்கு பள்ளி நிர்வாகம் பார்த்துக் கொள்ள வேண்டும் எனவும் பள்ளிகளுக்கு சுற்றறிக்கை கல்வி துறையின் சார்பில் அனுப்பப்பட்டுள்ளது. ‌

Categories

Tech |