Categories
தேசிய செய்திகள்

“அதிகரிக்கும் திருட்டு” பேருந்துகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படுமா….? பயணிகள் கோரிக்கை….!!!

பெங்களூர் நகரில் மெட்ரோபாலிட்டான் போக்குவரத்து கழகம் சார்பில் 6000-க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்படுகிறது. இதில் குளிர்சாதன பேருந்துகளும் அடங்கும். அதன்பிறகு பிஎம்டிசி பேருந்துகளை மாணவர்கள் மற்றும் வேலைக்கு செல்பவர்கள் அதிக அளவில் பயன்படுத்துவதால் காலை மாலை என இரு நேரங்களிலும் பேருந்துகளில் கூட்டம் நிரம்பி வழிகிறது. இந்தக் கூட்ட நெரிசலை பயன்படுத்திக்கொண்டு சிலர் திருட்டு வேலைகளில் ஈடுபடுகிறார்கள்.

முதலில் பணம், நகை போன்றவற்றை திருடியவர்கள் தற்போது அதிக அளவில் செல்போனை திருடுவதாக புகார் எழுந்துள்ளது. இந்த திருட்டு சம்பவங்களை தடுப்பதற்காக அனைத்து பேருந்துகளிலும் கண்காணிப்பு கேமராக்களை பொருத்த வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் காவல்துறையினரிடம் திருடர்களை பிடித்து  கொடுத்தாலும் கூட அவர்கள் சரியான முறையில் நடவடிக்கை எடுப்பதில்லை என பயணிகள் குற்றம் சாட்டியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |