Categories
அரசியல் மாநில செய்திகள்

பதவி வெறி புடிச்ச எடப்பாடி…! பேசாம வெளியே போய்ட்டாரு… கவனமாக காய் நகர்த்தும் ஸ்டாலின்…!!

இந்தி எதிர்ப்பு தீர்மான விளக்க பொதுக் கூட்டத்தில் பேசிய அமைச்சர் மெய்யநாதன் சிவா, இந்த தீர்மானத்தை எதிர்த்து,  அதற்காக ஆதரவளித்து பேசாமல், வாக்களிக்காமல், வெளியிலே சென்றவர் எடப்பாடி பழனிச்சாமி என்பதை நீங்கள் மறந்துவிடாதீர்கள் என்பதை நான் எச்சரிக்கிறேன். பதவி வெறி மட்டும் தான் அவர்களுக்கு…  பதவியில் இருக்க வேண்டும் என்பதுதான் அவர்களுக்கு.. திராவிட முன்னேற்றக் கழகத்தை பொருத்தவரை நம் தலைவரை பொறுத்த வரைக்கும்,  பதவி என்பதல்ல,  நம்முடைய உரிமை, நம் மொழியை பாதுகாப்பதை தலைவர் மிக கவனமாக இருக்கிறார்.

இந்த தேசத்தின் ஒரே மொழி, ஒரே தேர்தல், ஒரே ரேசன் என்கின்ற நிலைக்கு கொண்டு செல்வதற்கான அந்த நடவடிக்கைகளுக்கு தடுத்து நிறுத்துகின்ற தலைவர் நம் தலைவர். இன்றைக்கு பாஜகவினால் பல்வேறு இன்னல்கள் ஏற்பட்டு இருக்கிறது என்பதை மறந்து விடாதீர்கள். பல்வேறு மொழி, பல்வேறு மதங்கள் நிறைந்த இந்த தேசத்தை, இந்தியா என்கின்ற ஒரு நாடோடு  நிறுத்தி விடவில்லை.  இதை இந்திய துணை கண்டம் என்று அழைக்கின்றோம் என்றால், மக்கள் இன்றைக்கு அவர்களுடைய உரிமைகளுக்காக போராடிக் கொண்டிருக்கின்ற வேலையில்,  இந்தியாவில் நீங்கள் அறிந்திருப்பீர்கள்..

ராஜஸ்தான் என்கின்ற ஒரு மாநிலம். அந்த மாநிலத்தினுடைய அவர்களுடைய தாய்மொழி என்னவென்று கேட்டீர்கள் என்றால் ?  ராஜஸ்தானி. ஆனால் இன்றைக்கு இந்தி மொழியின் காரணமாக ராஜஸ்தான் மொழி இன்றைக்கு அழிந்திருக்கிறது. அதனால் அந்த மக்களுடைய பண்பாடு கலாச்சாரம் அழிந்து இருக்கிறது. அவர்களுடைய ஒட்டுமொத்த இனமே எங்கே இருக்கிறது ? என்ற கேள்விக்குறி கண்கூடாக நாம் பார்க்கிறோம்.

அதனால் உயிரும் மேலான நம் தாய் மொழியை காக்க வேண்டும், அந்த அறப்போரில் நீங்கள் அத்தனை பேரும் பங்கெடுத்து வெற்றி திலகம் இட்டு நம்முடைய மாண்புமிகு தமிழக முதலமைச்சர் பின்னால் அணிதிரண்டு,  மொழியையும்,  இந்த தேசத்தையும் பாதுகாக்கின்ற அறப்பணியை…  நாடாளுமன்ற தேர்தலில் நாம் மேற்கொண்டு 40க்கு 40 என்கின்ற வெற்றியை தலைவர் இடத்தில் ஒப்படைப்போம் என்று கேட்டு கொள்கிறேன்.

Categories

Tech |