Categories
கிரிக்கெட் விளையாட்டு

IND v ENG: 3 -1 ”இங்கிலாந்தை” அடிச்சி தூக்கி ”இந்தியா வரலாற்று” வெற்றி …!!

இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி அகமதாபாத்தில் நடைபெற்றுவருகிறது. இன்று நடைபெற்ற மூன்றாம் நாள் ஆட்டத்தில் 89 ரன்கள் முன்னிலையுடன் இந்திய அணி முதல் இன்னிங்ஸைத் தொடங்கியது.

அதன்படி வாஷிங்டன் சுந்தர் 60 ரன்களுடனும், அக்சர் பட்டேல் 11 ரன்களுடனும் களமிறங்கினர். தொடர்ந்து அபாரமாக இந்த இணை அணியின் ஸ்கோரை தொடர்ந்து உயர்த்தியது. அதன்பின் 43 ரன்கள் எடுத்திருந்த நிலையில் அக்சர் பட்டேல் எதிர்பாராதவிதமாக ரன் அவுட்டாகி வெளியேறினார்.

பின்னர் வந்த வீரர்களும் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க இந்திய அணி 365 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து இன்னிங்ஸை நிறைவுசெய்தது. இதில் வாஷிங்டன் சுந்தர் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 96 ரன்களைச் சேர்த்தார்.

இதைத்தொடர்ந்து 160 ரன்கள் பின்தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய இங்கிலாந்து அணிக்கு அஸ்வின் மூலம் அதிர்ச்சி காத்திருந்தது. அணியின் தொடக்க வீரர் ஜாக் கிரௌலி 5 ரன்களில் ஆட்டமிழக்க, பின்னர் வந்த ஜானி பேர்ஸ்டோவ் அஸ்வினின் முதல் பந்திலேயே ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார்.

அதன்பின் அக்சர் பட்டேல் தனது பங்கிற்கு டோமினிக் சிப்லி, பென் ஸ்டோக்ஸ், ஒல்லி போப் ஆகியோரை வெளியேற்றி அசத்தினார். மறுமுனையில் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திவந்த ஜோ ரூட் 30 ரன்கள் எடுத்திருந்த நிலையில் அஸ்வினிடம் விக்கெட்டை இழந்தார்.

இதனால் மூன்றாம் நாள் தேநீர் இடைவேளையின்போது இங்கிலாந்து அணி 6 விக்கெட்டுகளை இழந்து 91 ரன்களை மட்டும் எடுத்து தடுமாறியது. பிறகு ஆட்டம் தொடங்கியதும் அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுத்த இங்கிலாந்து அணி 135ரங்களுக்கு அணைத்து விக்கெட்டையும் இழந்ததால் மூலம் இந்திய அணி 25ரங்களில் இன்னிங்ஸ் வெற்றி பெற்று 3-1என தொடரை கைப்பற்றி அசத்தியது. இந்திய அணி தரப்பில் ரவிச்சந்திரன் அஸ்வின், அக்சர் பட்டேல் தலா 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளனர்.

Categories

Tech |