Categories
கிரிக்கெட் விளையாட்டு

“IND vs AUS” 11-வது ஓவரில் நடந்த குழப்பம்…. தோல்விக்கு காரணம் இது தான்….?

டி-20 போட்டியின் 3 வது தொடரில் இன்று இந்திய அணி தோல்வி அடைந்ததற்கான காரணம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியா vs ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான டி20 தொடர் இன்றுடன் நிறைவடைந்தது. ஏற்கனவே நடந்து முடிந்த போட்டியில் இந்திய அணி இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. இதையடுத்து மூன்றாவது போட்டி இன்று நடைபெற்றது. இந்த போட்டியிலும் இந்திய அணி தொடரை கைப்பற்றி ஆஸ்திரேலிய அணியை முழுவதுமாக வாஷ் அவுட் செய்யும் என்று ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்திய அணி தோல்வியை தழுவியது.

எனவே இந்திய அணி தோல்வி அடைந்ததற்கு முக்கிய காரணமாக இந்திய அணியின் கேப்டன் கோலி மற்றும் வைஸ்  கேப்டன் கே.எல் ராகுல் ஆகியோர் செய்த ஒரு சிறு தவறு தான் என்ற கருத்துகள் பரவலாக சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன. அதாவது, நடந்து முடிந்த இந்த போட்டியில் சிறப்பாக விளையாடிய ஆஸ்திரேலியா கேப்டன் Wadeஆல் தான் ரன்கள் 180க்கு மேல் சென்றது. ஆனால் அவரது விக்கெட்டை தமிழக வீரர் நடராஜன் 11 வது ஓவரில், அரைசதம் முடித்திருந்த தருணத்திலேயே LBW  மூலமாக எடுத்துவிட்டார். ஆனால் LBW அம்பயர் அவுட் கொடுக்காத காரணத்தினால் வைஸ் கேப்டனான ராகுலிடம் அப்பில் செய்யுமாறு நடராஜன் வலியுறுத்தினார்.

ஆனால் அதற்கு கே.எல் ராகுல் முறையாக பதிலளிக்காமல் மௌனமாக நடந்து சென்றார். இதைத் தொடர்ந்து நடராஜன், கேப்டன் கோலியை பார்த்து அப்பில் செய்யுமாறு வலியுறுத்த, விராட் கோலி DRSயிடம் அப்பீல் செய்தார். இதைத்தொடர்ந்து third ampier, DRS பார்த்துக் கொண்டிருந்த சில நொடிகளிலேயே நிறுத்தப்பட்டது. அதற்கு காரணம் DRSக்கு  கொடுக்கப்பட்ட நேரத்தை தாண்டி கேப்டன் கோலி அப்பீல் செய்தார் என்பதால்தான். இதனால் DRS நிறுத்தப்பட்டு, அவுட் கொடுக்கப்படவில்லை. ஆனால் அதன் பின்பு நடுவர்களால் DRS காட்சிப்படுத்தப்பட்ட போதுதான், உண்மையாகவே  நடராஜன் Wadeயை அவுட்டாக்கியிருந்தார் என்பது தெரியவந்தது.

நடைபெற்று முடிந்த போட்டியில் நடராஜனை நம்பி கேப்டன் விரைவாக செயல்பட்டு DRS எடுத்திருந்தால் 30 ரன்கள்  குறைக்கப்பட்டு, ரன்கள் கட்டுப்பாட்டுக்குள் வந்து ஒருவேளை இந்தியா வெற்றி பெற்றிருக்கக்கூடும் என்று கூறப்படுகிறது. அதேபோல் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள், இந்திய பவுலர்களின் அனைத்து ஓவர்களிலும் பவுண்டரிகளை விளாசி வந்த சமயத்தில் நடராஜன் ஓவரில் மட்டும் பவுண்டரிகளை அடிக்க சிரமப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |