Categories
கிரிக்கெட் விளையாட்டு

IND VS ENG : சதமடித்து அசத்திய கே.எல்.ராகுல் …. கெத்து காட்டும் இந்தியா ….!!!

இங்கிலாந்துக்கு எதிரான  2-வது டெஸ்ட் போட்டியில் கே.எல்.ராகுல் சதமடித்து  அசத்தியுள்ளார் .

இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 2-வது டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நேற்று தொடங்கியது .இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது .அதன்படி முதலில் பேட் செய்த இந்திய அணியில் ரோகித் சர்மா -கேஎல் ராகுல் ஜோடி தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இதில் இந்திய அணி 18.4 ஓவர்களில் 46 ரன்கள் எடுத்திருந்த போது மழை குறுக்கிட்டதால் ஆட்டம் நிறுத்தப்பட்டு உணவு இடைவேளை விடப்பட்டது. இதன்பிறகு மீண்டும் ஆட்டம் தொடங்கப்பட்டது. இதில் பொறுமையுடன் விளையாடிய ரோகித் சர்மா அரைசதம் கடந்தார். மறுமுனையில் கே.எல். ராகுல் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதில் 126 ரன்களில் இருந்தபோது ரோகித் சர்மா 83 ரன்களில் ஆட்டமிழந்தார்.

இதன்பிறகு களமிறங்கிய புஜாரா 9 ரன்னில் வெளியேறினார். அடுத்ததாக கேப்டன் கோலி நிதானமாக ஆடினார் . மறுமுனையில் நிதான  ஆட்டத்தை வெளிப்படுத்திய கே.எல்.ராகுல் சதம் அடித்து அசத்தியுள்ளார். இதில் 3-வது விக்கெட்டுக்கு ராகுல்- விராட் கோலி ஜோடி 117 ரன்களை குவித்துள்ளது. இதனால் முதல் நாள் ஆட்ட முடிவில் இந்தியா 90 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 276 ரன்கள் குவித்துள்ளது .இதில் கே.எல்.ராகுல் 127 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளார். இங்கிலாந்து தரப்பில் ஆண்டர்சன் 2 விக்கெட்டுகளும்,  ராபின்சன் ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர் .

Categories

Tech |