Categories
கிரிக்கெட் விளையாட்டு

IND VS ENG : 2-ம் நாள் ஆட்ட முடிவில் ….இங்கிலாந்து 119 ரன்கள் குவிப்பு ….!!!

இங்கிலாந்து அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 3 விக்கெட் இழப்பிற்கு 119 ரன்கள் குவித்துள்ளது .

இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான 2-வது டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நேற்று முந்தினம் தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட் செய்த இந்திய அணியில் தொடக்க வீரர்களாக ரோகித் சர்மா – கே.எல்.ராகுல் களமிறங்கினர். இருவரும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் ரோகித் சர்மா 83 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க , ராகுல் 127 ரன்னுடனும், ரஹானே 1 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். இதனால் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 3 விக்கெட் இழப்புக்கு 276 ரன்கள் குவித்தது .

இதையடுத்து 2-வது நாள் ஆட்டம் நேற்று தொடங்கியது. இதில் ராகுல் 129 ரன்னில் வெளியேற அடுத்து ரகானே 1 ரன்னில் ஆட்டமிழந்து வெளியேறினார். இதன் பிறகு களமிறங்கிய ரிஷப் பண்ட், ஜடேஜா ஜோடி சிறப்பாக விளையாட அணியின் ஸ்கோர் 300 ரன்களை தாண்டியது. இதில்  அதிகபட்சமாக ரிஷப் பண்ட் 37 ரன்களில் ஆட்டமிழக்க ,ஜடேஜா 40 ரன்னில் ஆட்டமிழந்தார். இறுதியாக இந்திய அணி 126.1 ஓவர்களில் அனைத்து விக்கெட் இழப்புக்கு  364 ரன்கள் எடுத்தது. இங்கிலாந்து அணி சார்பில் ஆண்டர்சன் 5 விக்கெட்டும், ராபின்சன் மற்றும் மார்க் வுட் தலா 2 விக்கெட்டும் கைப்பற்றினர்.

இதன் பிறகு களமிறங்கிய இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்சை தொடங்கியது. இதில் தொடக்க வீரராக ரொரி பர்ன்ஸ், டொமினிக் சிப்லி ஜோடி களமிறங்கினர். இதில் டொமினிக் 11 ரன்கள் எடுத்திருந்தபோது சிராஜின் பந்தில் ஆட்டம் இழந்தார். அடுத்து களமிறங்கிய ஹசீப் ஹமீது டக் அவுட் ஆகி வெளியேறினார். இதையடுத்து களமிறங்கிய கேப்டன் ஜோ ரூட் ,  பர்ன்சுடன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி 85 ரன்கள் குவித்தது. இதில் ரோரி பர்ன்ஸ் 49 ரன்கள் எடுத்திருந்தபோது ,ஷமியின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இறுதியாக 2-வது நாள் ஆட்ட முடிவில் இங்கிலாந்து 3 விக்கெட் இழப்பிற்கு 119 ரன்கள் குவித்துள்ளது. இதில்              கேப்டன் ஜோ ரூட் 48 ரன்களுடனும்  , பேர்ஸ்டோவ் 6  ரன்னுடனும்  களத்தில் உள்ளனர்.

Categories

Tech |