Categories
கிரிக்கெட் விளையாட்டு

IND VS ENG 2-வது டெஸ்ட் : 4-ம்  நாள் ஆட்ட நேர முடிவில் …. இந்தியா 181 ரன்கள் குவிப்பு ….!!!

இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 4-ம்  நாள் ஆட்ட நேர  முடிவில் இந்திய அணி 181 ரன்கள் குவித்துள்ளது .

இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது . இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்ந்தெடுத்தது. அதன்படி முதலில் களம் இறங்கிய இந்திய அணி முதல் இன்னிங்சில் 364 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது . இதில் அதிகபட்சமாக ரோகித் சர்மா 83 ரன்களும் ,கே.எல்.ராகுல் 129 ரன்களும் ,ரிஷப் பண்ட் 37, ஜடேஜா 40 ரன்களும் எடுத்தனர். இங்கிலாந்து தரப்பில் ஜேம்ஸ் ஆண்டர்சன் 5 விக்கெட்டும் ,ராபின்சன் மற்றும் மார்க் வுட் தலா 2 விக்கெட்டும் கைப்பற்றினர். இதன் பிறகு களமிறங்கிய இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட் இழப்புக்கு 391 ரன்கள் குவித்தது.

இதில் அதிரடியாக விளையாடிய கேப்டன் ஜோ ரூட் 180 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். இதனால் இங்கிலாந்து அணி 27 ரன்கள் முன்னிலையில் இருந்தது. இந்திய அணி தரப்பில் சிராஜ் 4 விக்கெட்டும் , இஷாந்த் சர்மா 3 விக்கெட்டும் ஷமி 2 விக்கெட்டும் கைப்பற்றினர். இதையடுத்து 4-ம் நாள் ஆட்டம் நடைபெற்றது .இதில் தொடக்க வீரராக களமிறங்கிய கேஎல் ராகுல் 5 ரன்களும் ,ரோகித் சர்மா 21 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். இதையடுத்து களமிறங்கிய கேப்டன் விராட் கோலி 20 ரன்னில்  ஆட்டமிழந்தார்.இதனால் இந்திய அணி 55 ரன்கள் எடுப்பதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

இதையடுத்து களமிறங்கிய புஜாரா – ரகானே ஜோடி பொறுப்புடன் விளையாடினர். இதில் புஜாரா அரை சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 45 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். அடுத்து களமிறங்கிய ஜடேஜா 3 ரன்னில் ஆட்டம் இழக்க ,மறுமுனையில் சிறப்பாக விளையாடிய ரகானே 61 ரன்களில் வெளியேறினார். 4-ம்  நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 82 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு  181  ரன்கள் குவித்துள்ளது . இதில் ரிஷப் பண்ட் 14 ரன்னுடனும் ,இஷாந்த் ஷர்மா 4 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளன. இதுவரை  இந்திய அணி 154 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. இங்கிலாந்து தரப்பில் மார்க் வுட் 3 விக்கெட்டும், மொயின் அலி 2 விக்கெட்டும் மற்றும்  சாம் கர்ரன் 1 விக்கெட்டும் கைப்பற்றினர்.

Categories

Tech |