Categories
கிரிக்கெட் விளையாட்டு

IND VS ENG 3-வது டெஸ்ட் : 2-ம் நாள் முடிவில் …. இங்கிலாந்து 345 ரன்கள் முன்னிலை ….!!!

இந்திய அணிக்கு எதிரான 3-வது டெஸ்டில்  இரண்டாவது நாள் ஆட்ட முடிவில் இங்கிலாந்து 432 ரன்கள் குவித்துள்ளது .

இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான 3-வது டெஸ்ட் போட்டி லீட்ஸ் ஹெட்டிங்லே மைதானத்தில் நடைபெற்று வருகிறது.இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணியால் இங்கிலாந்து அணியின் பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாமல் திணறியது . முன்னணி வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தனர் .இதனால் 40.4 ஓவர்களில் அனைத்து விக்கெட் இழப்புக்கு  78 ரன்களில் இந்திய அணி சுருண்டது. இங்கிலாந்து தரப்பில் ஜேம்ஸ் ஆண்டர்சன் மற்றும் கிரேக் ஓவர்டான் தலா  3 விக்கெட்டும் , ராபின்சன், சாம் கர்ரன் தலா 2 விக்கெட்டும்  கைப்பற்றினர். இதன் பிறகு இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்சை தொடங்கியது.

தொடக்க வீரர்களாக ரோரி பர்ன்ஸ்-ஹசீப் ஹமீத் ஜோடி களமிறங்கினர். இருவரும் சிறப்பான  ஆட்டத்தை வெளிப்படுத்தி  அரைசதம் கடந்தனர். இதனால் இங்கிலாந்து  அணி முதல் நாள் ஆட்ட முடிவில் விக்கெட் இழப்பின்றி 120 ரன்கள் குவித்தது. இந்த நிலையில் 2-வது நாள் ஆட்டம் நேற்று நடைபெற்றது.இதில் இங்கிலாந்து 135 ரன்கள் எடுத்திருந்தபோது ரோரி பர்ன்ஸ்  61 ரன்னில் ஆட்டமிழந்து வெளியேறினார். அடுத்ததாக  ஹசீப் ஹமீத் 68 ரன்னில் ஆட்டம் இழந்தார். இதன்பிறகு களமிறங்கிய தாவித் மலான்- கேப்டன் ஜோ ரூட் ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதில் தாவித் மலான் 70 ரன்னில் வெளியேற ,கேப்டன் ஜோ ரூட் 121 ரன்னில்   ஆட்டமிழந்தனர் .இறுதியாக இங்கிலாந்து அணி 2-ம் நாள் ஆட்ட முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 423 ரன்களை குவித்துள்ளது .இதில் இந்திய தரப்பில் முகமது ஷமி 3 விக்கெட்டும், சிராஜ் மற்றும் ஜடேஜா தலா 2 விக்கெட்டும், பும்ரா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.

Categories

Tech |