Categories
கிரிக்கெட் விளையாட்டு

IND VS ENG 4-வது டெஸ்ட் : ஹிட்மேன் ரோகித் அசத்தல் சதம் …. வலுவான நிலையில் இந்தியா ….!!!

இங்கிலாந்துக்கு எதிரான 4-வது டெஸ்டில் 2-வது இன்னிங்ஸில் இந்திய அணி 171 ரன்கள் முன்னிலையில் உள்ளது .

இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான 4-வது டெஸ்ட் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நடந்து வருகிறது. இதில் முதல் இன்னிங்சில் இந்திய அணி 192 ரன்கள் சுருண்டது. இதையடுத்து இங்கிலாந்து அணி 290 ரன்கள் குவித்தது .இதனால் 99 ரன்கள் பின்தங்கிய நிலையில் இந்திய அணி தனது 2-வது இன்னிங்சை தொடங்கியது. இதில் 2-ம் நாள் ஆட்ட முடிவில் இந்திய அணி 43 ரன்கள் எடுத்திருந்தது. இதில் ரோகித் சர்மா 20 ரன்னும், கே.எல்.ராகுல் 22 ரன்னும் எடுத்து  களத்தில் இருந்தனர் .இதையடுத்து மூன்றாவது நாள் ஆட்டம் தொடங்கியது .தொடர்ந்து விளையாடிய ராகுல் 47 ரன்களில் ஆட்டமிழந்தார் .இதையடுத்து  அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய ரோகித் சர்மா சதம் அடித்து அசத்தினார் .

இதன் மூலமாக வெளிநாட்டு மைதானத்தில்  முதல் டெஸ்ட் சதத்தை ரோகித்சர்மா பதிவு செய்துள்ளார். இதன்பிறகு  தொடர்ந்து விளையாடிய  ரோகித் சர்மா 127 ரன்கள் ஆட்டமிழந்து வெளியேறினார்.  மறுமுனையில் பொறுப்புடன் விளையாடிய புஜாரா 61 ரன்களில்  ஆட்டமிழந்தார். இதன்பிறகு களமிறங்கிய விராட் கோலி – ஜடேஜா ஜோடி நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அப்போது 92 ஓவர் முடிந்தபோது போதிய வெளிச்சம் இல்லாததால் ஆட்டம் நிறுத்தப்பட்டது இதனால் மூன்றாவது நாள் ஆட்ட முடிவில் இந்திய அணி 3 விக்கெட் இழப்புக்கு 270 ரன்கள் குவித்துள்ளது. இதில் கேப்டன் விராட்கோலி 22 ரன்னுடனும், ஜடேஜா 9 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.

Categories

Tech |