இந்தியாவுக்கு எதிரான 5-வது மற்றும் கடைசி நாள் ஆட்டத்தில் இங்கிலாந்து அணி 210 ரன்களில் தோல்வியடைந்தது .
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 4-வது டெஸ்ட் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வந்தது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதன்படி முதலில் பேட் செய்த இந்திய அணி முதல் இன்னிங்சில் 191 ரன்களும் இங்கிலாந்து அணி 290 ரன்கள் குவித்தது. இதனால் 99 ரன்கள் பின்தங்கிய நிலையில் இந்திய அணி தனது 2-வது இன்னிங்சை தொடங்கியது. இதில் தொடக்க வீரர்களாக களமிறங்கிய கே.எல. ராகுல் 46 ரன்னில் ஆட்டமிழக்க, அதிரடியாக விளையாடிய ரோகித் சர்மா சதம் அடித்து விளாசினார். இதைத் தொடர்ந்து புஜாரா ,ரிஷப் பண்ட் மற்றும் ஷர் துல் தாகூர் ஆகியோரும் அரைசதம் அடித்து அசத்தினர். இதனால் இந்திய அணி 2-வது இன்னிங்சில் 446 ரன்கள் குவித்தது.
இதன் பிறகு களமிறங்கிய இங்கிலாந்து அணி 368 ரன்கள் வெற்றி இலக்காக கொண்டு தனது 2-வது இன்னிங்சை தொடங்கியது. இதில் 4-ம் நாள் ஆட்ட முடிவில் இங்கிலாந்து அணி விக்கெட் இழப்பின்றி 77 ரன்கள் குவித்தது. இந்நிலையில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் தொடக்கத்தில் இருந்தே இங்கிலாந்து அணி விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இங்கிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் இருவரும் அரைசதம் எடுத்து அணியின் ஸ்கோரை உயர்த்திய போதும் அடுத்து களமிறங்கிய வீரர்கள் நிலைத்து நிற்கவில்லை. இறுதியாக 157 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற இந்திய அணி 2-1 என்ற கணக்கில் தொடரில் முன்னிலை வகிக்கிறது. இதில் அதிகபட்சமாக உமேஷ் யாதவ் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.இதன் மூலம் 50 ஆண்டுகளுக்குப் பிறகு லண்டன் ஓவல் மைதானத்தில் இந்தியா வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது .