Categories
கிரிக்கெட் விளையாட்டு

IND VS ENG : கபில் தேவுக்கு அடுத்ததாக …. லார்ட்ஸில் சாதனை படைத்த சிராஜ் ….!!!

இந்தியா -இங்கிலாந்து அணிகளுக்கு இடையான 2-வது டெஸ்ட் போட்டியில் இந்தியா 151 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இங்கிலாந்துக்கு எதிரான லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த 2-வது டெஸ்ட் போட்டியில் இந்தியா அபார வெற்றி பெற்றது. இதில் முதல் இன்னிங்சில் இந்திய அணி அபாரமாக விளையாடியது. ஆனால் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் இந்தியாவை விட 27 ரன்கள் முன்னிலையில் இருந்து நிலையில், 2-வது இன்னிங்சில் இறுதிக்கட்டத்தில் ஷமி – பும்ரா ஜோடியின்  அதிரடி ஆட்டத்தால் இந்திய அணி 2-வது இன்னிங்சில் 298 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 2-வது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி 120 ரன்களுக்குள் ஆல் அவுட் ஆனது. இதனால் 151 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. அத்துடன் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

இப்போட்டியில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் முன்னாள் வீரர் கபில் தேவின் 39-ஆண்டுக்கால சாதனையை சமன் செய்துள்ளார். கடந்த 1982-ஆம் ஆண்டு லார்ட்ஸ் மைதானத்தில் இந்திய அணியின் முன்னாள் வீரர் கபில்தேவ் 8 விக்கெட்டுகள் கைப்பற்றியதே  லார்ட்ஸ் மைதானத்தில் இந்திய வீரர் ஒருவர் டெஸ்டில்  கைப்பற்றிய அதிகபட்ச விக்கெட்டுகளாக இருந்தது. இந்த நிலையில் தற்போது நடந்த டெஸ்டில்  இளம் வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் முதல் இன்னிங்சில் 4 விக்கெட்டுகளும், 2-வது இன்னிங்சில் 4 விக்கெட்டுகளும் கைப்பற்றியுள்ளார். மொத்தமாக 8  விக்கெட்டுகளை கைப்பற்றிய முகமது சிராஜ் முன்னாள் வீரர் கபில் தேவின்             39-ஆண்டுக்கால சாதனையை சமன் செய்துள்ளார்.

Categories

Tech |