இந்தியா -இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி வருகிற 12-ஆம் தேதி லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறுகிறது.
இந்தியா -இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் முதல் டெஸ்ட் போட்டி நாட்டிங்காமில் கடந்த 4-ஆம் தேதி தொடங்கி 8-ஆம் தேதி வரை நடைபெற்றது. ஆனால் கடைசி நாள் ஆட்டம் மழையால் ரத்தானதால் போட்டி டிரா ஆனது. இதைதொடர்ந்து இரு அணிகளுக்கிடையே 2-வது டெஸ்ட் போட்டி வருகிற 12-ஆம் தேதி லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறுகிறது.
இதில் முதல் டெஸ்டில் இங்கிலாந்து அணியில் சுழற்பந்து வீச்சாளர்கள் இடம்பெறவில்லை. இந்நிலையில் 2-வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியின் மொயீன் அலி இடம் பெற்றுள்ளார்.இதனால்அவர் ஆடும் லெவன் அணியில் இடம்பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.