Categories
கிரிக்கெட் விளையாட்டு

IND VS NZ : பந்துவீச்சில் மிரட்டிய அக்சர் பட்டேல் ….! நியூஸி 296 ரன்களுக்கு ஆல் அவுட்….!!!

இந்திய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில்  நியூசிலாந்து அணி அனைத்து விக்கெட் இழப்புக்கு 296 ரன்கள் குவித்துள்ளது .

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நேற்று முன்தினம் கான்பூரில் தொடங்கியது. இதில் முதல் நாள் ஆட்ட முடிவில் இந்திய அணி 4 விக்கெட் இழப்புக்கு 258 ரன்கள் குவித்தது. இதையடுத்து நடந்த 2-வது நாள் ஆட்ட முடிவில் இந்திய அணி அனைத்து  விக்கெட் இழப்புக்கு 345 ரன்கள் எடுத்தது. இதன் பிறகு நியூசிலாந்து அணி தனது முதல் இன்னிங்சை தொடங்கியது .இதில் 2-ம் நாள் ஆட்ட முடிவில் நியூசிலாந்து அணி விக்கெட் இழப்பின்றி 129 ரன்கள் குவித்தது .இதில் தொடக்க வீரர்களாக களமிறங்கிய வில் யங் 75 ரன்னும், டாம் லாதம் 50 ரன்னும் எடுத்து களத்தில் இருந்தனர்.

இதையடுத்து இன்று 3-வது நாள் ஆட்டம் தொடங்கியது. இதில் வில் யங் 89  ரன்னில் வெளியேற அடுத்து களமிறங்கிய கேன் வில்லியம்சன் 18 ரன்னில் ஆட்டமிழந்தார். இதில்  சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட டாம் லாதம் 95 ரன்னில் அக்சர் படேல் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார் .இறுதியாக நியூசிலாந்து அணி அனைத்து விக்கெட் இழப்புக்கு 296 ரன்னில் சுருண்டது .இதில் இந்திய அணி சார்பில் அக்சர் பட்டேல் 5 விக்கெட் கைப்பற்றி அசத்தினார். இதையடுத்து அஸ்வின் 3 விக்கெட்டும், உமேஷ் யாதவ் மற்றும் ஜடேஜா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.

Categories

Tech |