Categories
கிரிக்கெட் விளையாட்டு

IND VS NZ 2-வது டெஸ்ட் : எண்ட்ரி கொடுக்கும் கோலி ….! இந்தியா VS நியூசிலாந்து இன்று மோதல் ….!!!

இந்தியா -நியூசிலாந்து அணிகளுக்கிடையேயான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் இன்று தொடங்குகிறது.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி 3 டி20 மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கு இடையே நடந்த 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணி 3-0 என்ற கணக்கில் தொடரை முழுமையாக கைப்பற்றியது.இதையடுத்து இரு அணிகளுக்கு இடையேயான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில்  நடந்து முடிந்து முதல் டெஸ்ட் போட்டி டிரா ஆனது . இந்நிலையில் இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி இன்று நடைபெறுகிறது.

இதில் முதல் டெஸ்டில் ஓய்வில் இருந்த கேப்டன் விராட் கோலி இன்று நடைபெறும் 2-வது டெஸ்டில் அணிக்கு  திரும்புகிறார். இதனால் இந்திய அணி பேட்டிங்கில் கூடுதல் பலத்துடன் காணப்படும் .அதேசமயம் விராட்கோலி அணிக்கு திரும்பி இருப்பதால் அணியில் இருந்து வெளியேறப்போகும்  வீரர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.இதனிடையே இன்று தொடங்கும்          2-வது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெறும் அணியே  டெஸ்ட் தொடரை கைப்பற்றும் என்பதால் இரு அணிகளும் சம பலத்துடன் களமிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்போட்டி இன்று காலை 9.30 மணிக்கு மும்பை வான்கடே மைதானத்தில் தொடங்குகிறது.

Categories

Tech |