நியூசிலாந்து அணிக்கெதிரான 2-வது டெஸ்டில் முதல் நாள் ஆட்ட முடிவில் இந்திய அணி 4 விக்கெட் இழப்புக்கு 221 ரன்கள் குவித்துள்ளது .
இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான 2-வது டெஸ்ட் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் இன்று நடைபெற்றது. இதில் 9:30 மணிக்கு தொடங்க வேண்டிய போட்டி மழை ஈரப்பதம் காரணமாக 11.30 மணிக்கு தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட் செய்த இந்திய அணியில் தொடக்க வீரர்களாக மயங்க் அகர்வால்-சுப்மன் கில் ஜோடி களமிறங்கினர்.இதில் சுப்மன் கில் 44 ரன்னில் ஆட்டமிழக்க அடுத்து வந்த புஜாரா ,கேப்டன் விராட் கோலி ஆகியோர் டக் அவுட் ஆகி வெளியேறினர் .இதனால் இந்திய அணி 90 ரன்னுக்குள் 3 விக்கெட் இழந்து திணறியது. இதன்பிறகு 4-ஆவது விக்கெட்டுக்கு களமிறங்கிய ஸ்ரேயாஸ் அய்யர் ,மயங்க் அகர்வாலுடன் ஜோடி சேர்ந்தார் .
ஒரு பக்கம் விக்கெட்டுகள் இழக்க மறுமுனையில் சிறப்பாக விளையாடிய மயங்க் அகர்வால் சதம் அடித்து அசத்தினார். இதில் ஸ்ரேயாஸ் அய்யர் 18 ரன்னில் ஆட்டமிழக்க, அடுத்து விருத்திமான் சஹா களமிறங்கினார். இறுதியாக முதல் நாள் ஆட்ட முடிவில் இந்திய அணி 4 விக்கெட் இழப்புக்கு 221 ரன்கள் குவித்துள்ளது .இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய மயங்க் அகர்வால் 196 பந்துகளில் 13 பவுண்டரி, 3 சிக்சர் அடித்து விளாசி 120 ரன்னும், விருத்திமான் சஹா 25 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளனர் .நியூசிலாந்து அணி தரப்பில் அஜாஸ் பட்டேல் 4 விக்கெட் கைப்பற்றினார்.