நியூசிலாந்து அணிக்கெதிரான 3-வது டி20 போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய அணி 184 ரன்கள் குவித்துள்ளது.
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையேயான 3-வது டி20 போட்டி கொல்கத்தாவில் இன்று நடைபெற்று வருகிறது .இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட் செய்த இந்திய அணியில் தொடக்க வீரர்களாக ரோகித் சர்மா-இஷான் கிஷன் ஜோடி களமிறங்கினர்.இருவரும் அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர் .இதில் இஷான் கிஷன் 29 ரன்னில் வெளியேற, அடுத்து களமிறங்கிய சூர்யகுமார் யாதவ் 0 ரன், ரிஷப் பண்ட் 4 ரன் எடுத்து ஆட்டமிழந்தனர் .ஒருபுறம் விக்கெட்டுகள் இழக்க மறுபுறம் அதிரடியாக விளையாடிய ரோகித் சர்மா 56 ரன்னில் வெளியேறினார்.
இதன்பிறகு களமிறங்கிய வெங்கடேஷ் அய்யர் (20 ரன்) , ஸ்ரேயாஸ் அய்யர் (25 ரன்) , ஹர்ஷல் படேல் (18 ரன்) ஆகியோர் ஆட்டமிழந்தனர் .இறுதியாக இந்திய அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 184 ரன்கள் குவித்துள்ளது. குறிப்பாக அணியில் பின் வரிசையில் களமிறங்கிய வீரர்கள் அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் நியூசிலாந்து அணி தரப்பில் மிட்செல் சான்ட்னர் 3 விக்கெட் கைப்பற்றினார். இதன் பிறகு 185 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து அணி விளையாடி வருகிறது.