Categories
கிரிக்கெட் விளையாட்டு

IND VS NZ : முதல் வெற்றியை பதிவு செய்தது இந்தியா ….! 5 விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றி …..!!!

நியூசிலாந்து அணிக்கெதிரான முதல் டி20 போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி திரில் வெற்றி பெற்றது .

இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி நேற்று ஜெய்ப்பூரில் நடந்தது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பீல்டிங் தேர்வு செய்தது .அதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 164 ரன்கள் குவித்தது. இதில் அதிகபட்சமாக மார்டின் கப்தில் 70 ரன்களும் , சாப்மேன் 63 ரன்களும் எடுத்தனர் .இந்திய அணி தரப்பில் புவனேஷ்வர் குமார் ,அஸ்வின் ஆகியோர் தலா 2 விக்கெட்டும், தீபக் சாகர்,முகமது சிராஜ் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர். இதன்பிறகு 165 ரன்கள் வெற்றி இலக்காக கொண்டு இந்திய அணி விளையாடியது .இதில் தொடக்க வீரர்களாக ரோகித் சர்மா – கே.எல்.ராகுல் ஜோடி களமிறங்கினர் .இதில் ராகுல் 15 ரன்னில் ஆட்டமிழக்க ,அடுத்து களமிறங்கிய சூர்யகுமார் யாதவ் ரோகித் சர்மாவுடன் ஜோடி சேர்ந்தார்.

இருவரும் அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் ரோகித் சர்மா 45 ரன்னில் ஆட்டமிழக்க அடுத்ததாக சூர்யகுமார் யாதவ் 62 ரன்னில் வெளியேறினார். இதனால் ஆட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.அடுத்தாக  களமிறங்கிய ஸ்ரேயாஸ் ஐயரும் 5 ரன்னில்  ஆட்டமிழக்க ,இதன்பிறகு களமிறங்கிய வெங்கடேஷ் ஐயர் பவுண்டரி விளாசிய கையோடு வெளியேறினார் .மறுமுனையில் ரிஷப் பண்ட் இறுதியில் பவுண்டரி விளாச, இந்திய அணி 19.4 ஓவரில் 5 விக்கெட்  இழப்புக்கு 166 ரன்கள் எடுத்தது. இதனால் 5 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி திரில் வெற்றி பெற்றது . இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலையில் உள்ளது.

Categories

Tech |