Categories
கிரிக்கெட் விளையாட்டு

# IND VS NZ TEST : ரிச்சர்டு ஹேட்லியின் சாதனையை சமன் செய்த அஸ்வின்…..!!!

இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடரில் நியூசிலாந்து அணி வேகப்பந்து வீச்சாளர்  ரிச்சர்டு ஹேட்லி அதிக விக்கெட் கைப்பற்றிய சாதனையை இந்திய வீரர் அஸ்வின் சமன் செய்துள்ளார் .

இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கு இடையே கடந்த 1956-ம் ஆண்டு முதல் டெஸ்ட் தொடர்  நடந்தது. இதுவரை 22 டெஸ்ட் தொடர் முடிந்துள்ளது .இதில் இரு நாடுகளுக்கு இடையே நடந்த டெஸ்ட் தொடரில் நியூசிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ரிச்சர்டு ஹேட்லி அதிக விக்கெட் கைப்பற்றி இருந்தார் .இதில் 14 டெஸ்ட் போட்டியில் 24 இன்னிங்சில் விளையாடியுள்ள அவர் 65 விக்கெட் கைப்பற்றி முதல் இடத்தில் இருந்தார் . தற்போது இந்த சாதனையை இந்திய அணியின்  சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் சமன் செய்துள்ளார்.

இதில் மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று நடந்த டெஸ்ட் போட்டியில் அவர் 3 விக்கெட் கைப்பற்றி இருந்தார் .அப்போது  ரோஸ் டெய்லர் விக்கெட்டைஅஸ்வின்  கைப்பற்றியதன் மூலம் இந்த சாதனையை சமன் செய்துள்ளார்.இதுவரை 9 டெஸ்ட் போட்டியில் 17 இன்னிங்சில் விளையாடியுள்ள அஸ்வின் 65 விக்கெட் கைப்பற்றியுள்ளார் .இதில் மும்பை டெஸ்டில் முதல் இன்னிங்சில் அஸ்வின் 4 விக்கெட் கைப்பற்றினார் .அதோடு கான்பூரில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் அவர் 6 விக்கெட் கைப்பற்றி இருந்தார்.

Categories

Tech |