Categories
கிரிக்கெட் விளையாட்டு

IND VS NZ :” தோல்வியின் விளிம்பில் இருந்து மீண்டு வந்தோம்”…. ஓப்பனாக பேசிய கேன் வில்லியம்சன் ….!!!

இந்திய அணிக்கெதிரான முதல் டெஸ்ட் போட்டியில் கிட்டத்தட்ட தோல்வியின் விளிம்பில் இருந்து மீண்டு வந்தோம் என கேன் வில்லியம்சன் தெரிவித்துள்ளார் .

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி கான்பூரில் நடைபெற்றது .இதில் டாஸ் வென்று முதலில் களமிறங்கிய இந்திய அணி 345 ரன்கள் குவித்தது. இதையடுத்து களமிறங்கிய  நியூசிலாந்து அணி 296 ரன்கள் எடுத்தது .இதனால் 49 ரன்கள் முன்னிலையில் தனது 2-வது இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணி 7 விக்கெட் இழப்புக்கு 234 ரன்கள் எடுத்திருந்த நிலையில் டிக்ளேர் செய்தது .இதில் இந்திய அணி மொத்தம் 283 ரன்கள் முன்னிலையில் இருந்தது.இதனால் 284 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து அணி களமிறங்கியது.இதில் நியூசிலாந்து அணியின் டாம் லாதம் ,வில்லியம், கேப்டன் கேன் வில்லியம்சன் ஆகியோரை தவிர மற்ற வீரர்கள் வந்த வேகத்தில் வெளியேறினர்.

இதனால் இந்திய அணி வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு பிரகாசமாக இருந்தது .ஆனால் இறுதியில் களமிறங்கிய அஜாஸ் படேல்- ரவீந்திரன் ஜோடி தோல்வியின் விளிம்பில் இருந்து நியூசிலாந்து அணியை காப்பாற்றினர். இதில் கைவசம் ஒரு விக்கெட் மட்டுமே இருந்த நிலையில் கடைசி 12 ஓவரில் திறம்பட சமாளித்து இருவரும்  விக்கெட் இழப்பை தடுத்தனர். இதனால் இரு அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது .இதனிடையே  போட்டி முடிந்த பிறகு நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் கூறும்போது,” போட்டியில் இந்திய வீரர்கள் ஆடிய விதம் எங்களுக்கு நெருக்கடியை அளித்தது .அதோடு கிட்டதட்ட தோல்வியின் விளிம்பில் இருந்து மீண்டு வந்துள்ளோம், ஒட்டு மொத்தத்தில் இது சிறப்பான ஆட்டமாக அமைந்தது. அதேசமயம் கடைசி கட்டத்தில் களமிறங்கிய அஜாஸ் படேல், ரவீந்திரன் இருவரும் சிறப்பாக செயல்பட்டு அணியை தோல்வியில் இருந்து மீட்டனர். அதேபோல் தொடக்கத்தில்  ஷோமர்வில் விளையாடிய விதம் மிகுந்த நம்பிக்கை அளித்தது” இவ்வாறு அவர் கூறினார்.

Categories

Tech |