இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் 2-ம் நாள் ஆட்டம் முடிவில் நியூசிலாந்து அணி விக்கெட் இழப்பின்றி 129 ரன்கள் குவித்துள்ளது.
இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான முதல் டெஸ்ட் போட்டி கான்பூரில் நேற்று தொடங்கியது. இதில் அறிமுக வீரராக களமிறங்கிய ஸ்ரேயாஸ் அய்யர் சதமடித்து அசத்தினார். இதையடுத்து சுப்மன் கில் 52 ரன்னும் , ஜடேஜா 50 ரன்கள் எடுக்க இந்திய அணி 111.1 ஓவரில் அனைத்து விக்கெட் இழப்புக்கு 345 ரன்கள் எடுத்தது. இதில் நியூசிலாந்து அணி தரப்பில் டிம் சவுதி 5 விக்கெட்டும், ஜெமிசன் 3 விக்கெட்டும் கைப்பற்றினர். இதன் பிறகு நியூசிலாந்து அணி தனது முதல் இன்னிங்சை தொடங்கியது .
இதில் தொடக்க வீரர்களாகடாம் லாதம்- வில் யங்க் ஜோடி களமிறங்கினர் .இருவரும் அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர் .இதில் இந்திய அணி பவுலர்கள் இந்த ஜோடியை பிரிக்க எடுத்த முயற்சிகள் அனைத்தும் வீணாணது. இதில் இருவரும் அரைசதம் கடந்து அசத்தினர். இதனால் 2-ம் நாள் ஆட்டம் முடிவில் நியூசிலாந்து அணி 57 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 129 ரன்கள் குவித்துள்ளது.இதில் டாம் லாதம் 50 ரன்னும் ,வில் யங் 75 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளனர் .