இந்திய அணிக்கெதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் தென்ஆப்பிரிக்கா அணி அபார வெற்றி பெற்றது .
இந்தியா- தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி ஜோகன்னஸ்பெர்க்கில் நடைபெற்று வந்தது. இதில் டாஸ் வென்று முதலில் களமிறங்கிய இந்திய அணி முதல் இன்னிங்சில் அனைத்து விக்கெட் இழப்புக்கு 202 ரன்கள் எடுத்தது. இதன் பிறகு முதல் இன்னிங்சை தொடங்கிய தென் ஆப்ரிக்கா அணி 79.4 ஓவரில் அனைத்து விக்கெட் இழப்புக்கு 229 ரன்கள் எடுத்தது. இதில் இந்திய அணி சார்பில் ஷர்துல் தாகூர் 7 விக்கெட்டும், முகமது சமி 2 விக்கெட்டும், பும்ரா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர். இதையடுத்து 2-வது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி 3-வது நாள் ஆட்ட முடிவில் அனைத்து விக்கெட் இழப்புக்கு 266 ரன்கள் எடுத்தது.
இதனால் தென் ஆப்பிரிக்க அணிக்கு 240 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இதையடுத்து தனது 2-வது இன்னிங்சை தொடங்கிய தென் ஆபிரிக்க அணி 3ஆம் நாள் ஆட்ட முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 118 ரன்கள் எடுத்தது. இந்நிலையில் நேற்று 4-ம் நாள் ஆட்டம் தொடங்கியது. ஆனால் மழை காரணமாக போட்டி தாமதமாக தொடங்கியது. இதன்பிறகு பேட்டிங் செய்த தென்ஆப்பிரிக்கா அணி 67.4 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 243 ரன்கள் குவித்தது. இதன் மூலம் தென் ஆப்பிரிக்க அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.