Categories
கிரிக்கெட் விளையாட்டு

IND VS SA : 2-வது டெஸ்ட் போட்டி …. பயிற்சியை தொடங்கிய இந்திய அணி ….!!!

தென் ஆப்பிரிக்கா அணிக்கெதிரான 2-வது டெஸ்ட்  போட்டிக்கு தயாராகும் விதமாக இந்திய அணி வீரர்கள்  வலைப்பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்திய அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகின்றது. இதில் இரு அணிகளுக்கு இடையே நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் 113 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. அதோடு செஞ்சூரியனில்  வெற்றி பெற்ற முதல் ஆசிய அணி என்ற பெருமையும் இந்திய அணி பெற்றது. இந்நிலையில் இரு அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி வருகின்ற 3ஆம் தேதி ஜோகன்ஸ்பர்கில்  நடைபெறுகின்றது .

இப்போட்டிக்காக இந்திய அணி வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளன. ஏற்கனவே முதல் போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணி 2-வது போட்டியில் வெற்றி பெறும் முனைப்புடன் களம் இறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய அணி 2-வது டெஸ்டிலும் வெற்றி பெற்றால் தென்னாப்பிரிக்காவில் முதல் முறையாக டெஸ்ட் தொடரை கைப்பற்றும் என்பதால் இப்போட்டி மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

Categories

Tech |