Categories
கிரிக்கெட் விளையாட்டு

IND VS SA 2-வது டெஸ்ட் : சாதனை படைக்க காத்திருக்கும் விராட் கோலி ….! விவரம் இதோ ….!!!

இந்தியா -தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கிடையேயான 2-வது டெஸ்ட் போட்டி ஜோகன்னஸ்பர்க்கில் இன்று தொடங்குகிறது.

இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டனான விராட் கோலி இந்த 2019-ஆம் ஆண்டிலிருந்து சதமடிக்க முடியாமல் தடுமாறி வருகிறார் .இந்நிலையில் இந்திய  அணி  தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது .அதோடு அணியின் பந்துவீச்சாளர்கள் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தனர். இந்நிலையில் 2-வது டெஸ்ட் போட்டி ஜோகன்னஸ்பர்க்கில் இன்று நடைபெறுகிறது.

இந்த மைதானம் விராட் கோலிக்கு மிகவும் ராசியானது ஆகும் . ஏனெனில் இந்த மைதானத்தில் இரண்டு போட்டிகளில் விளையாடி அவர் ஒரு சதம் , 2அரை சதம் அடித்துள்ளார் .இதனால் இந்த 2-வது டெஸ்டில் சதத்திற்கான வறட்சியை முடிவு கொண்டு வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேசமயம் இந்த மைதானத்தில் விராட் கோலி 310 ரன்கள் எடுத்துள்ளார். இதில் நியூசிலாந்து அணி வீரர் ஜான் ரெய்டு  316 ரன்கள் குவித்துள்ளார் .இதனால் விராட் கோலி இன்னும் 7 ரன் எடுத்தால் அதிக ரன்கள் எடுத்த விளையாட்டு வீரர் என்ற பெருமையை பெறுவார்.

Categories

Tech |