இந்தியா -தென்னாபிரிக்கா அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி வருகிற 11-ஆம் தேதி நடைபெறுகிறது.
இந்தியா -தென்னாபிரிக்கா அணிகளுக்கிடையிலான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது .இதில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியாவும், இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தென் ஆப்ரிக்காவும் வெற்றி பெற்றுள்ளன. இதனால் 1-1 என்ற கணக்கில் இரு அணிகளும் சமநிலை உள்ளது. இந்நிலையில் இரு அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி வருகிற 11-ஆம் தேதி நடைபெறுகிறது .இந்நிலையில் தென்னாப்பிரிக்கா அணியின் கேப்டன் டீன் எல்கர் பேட்டி ஒன்றில் கூறும்போது,” ஜோகன்னஸ்பர்க்கில் நடந்த 2-வது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் நாங்கள் சரியான திசையில் பயணிக்கிறோம் என்பதில் சந்தேகமில்லை.இது ஒரு நேர்மறையான நகர்வாகும்.
இதையடுத்து வரும் டெஸ்ட் போட்டி உள்ளிட்ட சவால்கள் எங்களுக்கு எதிர்நோக்கி இருக்கிறது. அடுத்து சந்திக்க இருக்கும் சூழ்நிலைகளை எங்களது வீரர்கள் எப்படி எதிர்கொள்ளப் போகிறார்கள் என்பது தான் முக்கியம். அதோடு போட்டிக்கு முன்பு சில விஷயங்களில் நாங்கள் கவனம் செலுத்த வேண்டும். மேலும் எங்களுடைய திட்டத்தில் உறுதியாக இருக்க வேண்டியது அவசியமாகும். அதேசமயம் அடுத்த டெஸ்ட் போட்டியில் எங்களுடைய ஆட்ட வியூகத்தில் அதிக மாற்றம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை என நினைக்கிறேன் ” இவ்வாறு அவர் கூறியுள்ளார்.