தென்ஆப்பிரிக்கா அணிக்கெதிரான 3-வது டெஸ்டில் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 223 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
இந்தியா – தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி கேப்டவுனில் இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணியில் தொடக்க வீரர்களாக கே.ல்.ராகுல்- மயங்க் அகர்வால் ஜோடி களமிறங்கினர். இதில் கேஎல் ராகுல் 12 ரன்களில் ஆட்டமிழக்க ,மயங்க் அகர்வால் 15 ரன்னில் வெளியேறினார்.
இதன்பிறகு களமிறங்கிய புஜாரா (43 ), ரிஷப் பண்ட் (27) ,ரஹானே(9), அஸ்வின் (2), ஷர்துல் தாகூர் (12), பும்ரா (0), முகமது சமி (7) ஆகியோர் அட்டமிழந்து வெளியேறினர்.இதில்அதிகபட்சமாக கேப்டன் விராட் கோலி 79 ரன்கள் எடுத்தார் . இறுதியாக இந்திய அணி முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட் இழப்புக்கு 223 ரன்கள் குவித்துள்ளது.தென்னாப்பிரிக்கா அணி தரப்பில் ரபாடா 4, மார்கோ ஜேன்சன் 3, ஆலிவியர், நிகிடி மற்றும் கேஷவ் மகராஜ் தலா 1 விக்கெட் கைப்பற்றினர்.