Categories
கிரிக்கெட் விளையாட்டு

IND VS SA : 3-வது டெஸ்டில் ஷ்ரேயாஸ், விஹாரிக்கு அணியில் இடம் உண்டா….? ராகுல் டிராவிட் விளக்கம்….!!!

தென் ஆப்பிரிக்க அணிக்கெதிரான 3-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியில் ஸ்ரேயாஸ் ஐயர், ஹனுமா விஹாரி இடம்பெறுவார்களா என்பது குறித்து பயிற்சியாளர் ராகுல் டிராவிட் விளக்கமளித்துள்ளார்.

இந்தியா – தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியாவும், இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தென் ஆப்ரிக்காவும் வெற்றி பெற்றது. இதனால் இரு அணிகளும் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது. இந்நிலையில் இரு அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி வருகிற 11-ஆம் தேதி கேப்டவுனில் நடைபெறுகிறது. இதில் இந்திய அணியில் சீனியர் வீரர்களான புஜாரா, ரஹானே ஆகியோர் கடந்த 2 ஆண்டுக்கு மேலாக டெஸ்ட் கிரிக்கெட்டில் ரன் குவிக்க முடியாமல் திணறி வருகின்றன. அதேசமயம் அவர்களது திறமையின் மீது நம்பிக்கை மற்றும் கடந்த காலங்களில் அவர்கள் அணிக்கு அளித்த பங்களிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் இந்திய அணி தொடர்ந்து வாய்ப்பு அளிக்கப்படுகின்றது.

இந்த நிலையில் தற்போது ஸ்ரேயாஸ் அய்யர் , ஹனுமா விஹாரி ஆகியோர்  டெஸ்ட் கிரிக்கெட்டில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றன. இதுகுறித்து இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக ராகுல் டிராவிட் கூறுகையில்,” இரண்டாவது டெஸ்ட் போட்டியில்  ஹனுமா விஹாரி நன்றாக விளையாடி உள்ளார். அதோடு அவர் இரண்டாவது இன்னிங்சில் மிக சிறப்பாக விளையாடினார். அதேசமயம் நியூசிலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஸ்ரேயாஸ் அய்யர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார் .இருவரும் அவர்களுக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்டனர் .ஆனால் அதே சமயம் அணியில் மூத்த வீரர்கள் இருக்கும்போது இளம் வீரர்கள் வாய்ப்புக்காக காத்திருக்க வேண்டும். அதுவரை கிடைக்கும் வாய்ப்பில் அவர்கள் பெரிய அளவு ரன்களை எடுக்க வேண்டும்” இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |