தென் ஆப்பிரிக்கா அணிக்கெதிரான 2-வது டெஸ்டில் இரண்டாம் நாள் ஆட்ட முடிவில் இந்திய அணி 85 ரன்கள் எடுத்துள்ளது.
இந்தியா- தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி ஜோகன்னஸ்பெர்க்கில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணி முதல் இன்னிங்சில் அனைத்து விக்கெட் இழப்புக்கு 202 ரன்கள் எடுத்தது. இதில் அதிகபட்சமாக கேஎல் ராகுல் 50 ரன்னும், அஸ்வின் 46 ரன்கள் எடுத்தனர். தென்னாப்பிரிக்கா அணி தரப்பில் மேர்கோ ஜேன்சண் 4 விக்கெட்டும், ரபாடா மற்றும் டுவானே ஒலிவியர் ஆகியோர் தலா 3 விக்கெட்டும் கைப்பற்றினர். அதன் பிறகு 2-வது நாள் ஆட்டம் நேற்று நடைபெற்றது. இதில் 202 ரன்கள் பின்தங்கிய நிலையில் தென்னாப்பிரிக்கா அணி தனது முதல் இன்னிங்சை தொடங்கியது.
இறுதியாக தென்ஆப்பிரிக்கா அணி 229 ரன்கள் ஆட்டமிழந்தது. இதன் பிறகு இந்திய அணி தனது 2-வது இன்னிங்சை தொடங்கியது. இதில் தொடக்க வீரராக களமிறங்கிய கேப்டன் கே.எல்.ராகுல் 8 ரன்னில் வெளியேற, மயங்க் அகர்வால்23 ரன்னில் ஆட்டமிழந்தார். இறுதியாக 2-ம் நாள் ஆட்ட முடிவில் இந்திய அணி 2 விக்கெட் இழப்புக்கு 85 ரன்கள் எடுத்துள்ளது. இதன் மூலம் தென் ஆப்பிரிக்க அணியை விட இந்தியா 58 ரன்கள் முன்னிலையில் உள்ளது. இதில் புஜாரா 35 ரன்னுடனும், ரஹானே 13 ரன்னுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளனர்.