Categories
கிரிக்கெட் விளையாட்டு

IND VS SA :’இந்திய அணியின் வெற்றியை தடுப்போம் ‘ ….! தென் ஆப்ரிக்கா அணி கேப்டன் பேச்சு …..!!!

சொந்த மண்ணில்  விளையாடுவது எங்கள் அணிக்கு  கூடுதல் பலம் என தென் ஆப்ரிக்கா டெஸ்ட்  அணியின்  கேப்டன் டீன் எல்கர் தெரிவித்துள்ளார்.

இந்தியா -தென்னாபிரிக்கா அணிகளுக்கிடையேயான முதல் டெஸ்ட் போட்டி நாளை செஞ்சுரியன் நடைபெறுகிறது. இந்த டெஸ்ட் போட்டி இரு அணிகளுக்கும் இடையே எதிர்பார்ப்பு மற்றும் சவால் நிறைந்ததாக இருக்கும் என தென் ஆப்பிரிக்கா டெஸ்ட் அணியின் கேப்டனான டீன் எல்கர் கூறியுள்ளார் .இதுகுறித்து அவர் கூறுகையில் ,”சர்வதேச அளவில் அவர்கள் முதல் இடத்தில் இருக்கலாம். ஆனால் நாங்கள் அதை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. சில சமயங்களில் அவர்களுக்கும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது .ஒரு கிரிக்கெட் பார்வையாளராக இதை கூறுகிறேன். அதேபோல் கடைசி போட்டியில் அவர்கள் செயல்பட்டதை வைத்து அவர்களின் திறமையை மதிப்பிட கூடாது .

அதேசமயம் நாங்கள் எங்கள் சொந்த மண்ணில் விளையாடுகிறோம். இது எங்கள் அணிக்கு கூடுதல் பலமாகும். அதேபோல் இந்திய அணியின் வெளிநாட்டு பயண வெற்றிக்கு அவர்களது வேகப்பந்து வீச்சு காரணமாக இருக்கலாம்.அதேசமயம் தென்னாபிரிக்கா ஆடுகளத்தின் தன்மையை அவர்களது வேகப்பந்து வீச்சாளர்கள் பயன்படுத்திக் கொள்வார்கள் என கருதுகிறேன் அதே சமயம் இந்திய அணியின் பவுலர்கள் பலத்தை நாங்கள் அறிவோம் .இதனால் இத்தொடரில் இந்திய அணியின் வெற்றியை தடுப்பதற்காக அனைத்து முயற்சிகளையும் நாங்கள் மேற்கொள்வோம் “இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |