தென்னாபிரிக்கா அணிக்கெதிரான முதல் டெஸ்டில் முதல் நாள் ஆட்ட முடிவில் இந்திய அணி 3 விக்கெட் இழப்புக்கு 272 ரன்கள் குவித்துள்ளது.
இந்தியா-தென்னாபிரிக்கா அணிகளுக்கிடையேயான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெறுகிறது. இதில் இரு அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நேற்று செஞ்சூரியனில் தொடங்கியது.இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க வீரர்களாக மயங்க் அகர்வால்-கே.எல் ராகுல் ஜோடி களமிறங்கினர் .இருவரும் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர் .
இதில் மயங்க் அகர்வால் 60 ரன்னில் ஆட்டமிழக்க அடுத்து வந்த புஜாரா முதல் பந்திலேயே கீகன் பீட்டர்சனிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார் .இதன் பிறகு களமிறங்கிய விராட் கோலி 45 ரன்னில் ஆட்டமிழந்தார் .இதில் சிறப்பாக விளையாடிய கே.எல்.ராகுல் சதம் அடித்து அசத்தினார். இதனால் முதல் நாள் ஆட்ட முடிவில் இந்திய அணி 3 விக்கெட் இழப்புக்கு 272 ரன்கள் குவித்துள்ளது.இதில் கே.எல்.ராகுல் 122 ரன்னும் , ரஹானே 40 ரன்னும் எடுத்து களத்தில் உள்ளனர்.