Categories
கிரிக்கெட் விளையாட்டு

IND VS SA முதல் டெஸ்ட் :இரண்டாவது நாள் ஆட்டம் ….மழையால் ரத்தானது ….!!!

இந்தியா- தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கிடையே 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது .இதில் இரு அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி செஞ்சூரியனில் நேற்று தொடங்கியது .இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணி முதல் நாள் ஆட்ட முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 272 ரன்கள் குவித்தது. இதில் கேஎல் ராகுல் 122 ரன்னுடனும், ரஹானே 40 ரன்னுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.

இந்நிலையில் 2-வது நாள் ஆட்டம் இன்று பிற்பகல் 1 30 மணிக்கு தொடங்க இருந்தது.ஆனால் மழை காரணமாக போட்டி தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது .இதனால் போட்டி சிறிது தாமதமாக தொடங்கும் என அறிவிக்கப்பட்ட நிலையில்,ஒரு பந்து கூட வீசப்படாமல் போட்டி ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.இந்நிலையில் நாளை நடைபெற உள்ள 3-வது நாள் ஆட்டம் அரைமணி நேரத்திற்கு முன்பாக தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |